இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்

எதையும் சமாளிக்கும் நம்பிக்கை, தைரியம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் பிரச்சினையை சுமுகமாக தீர்த்துவைப்பீர்கள். குடும்பத்தோடு புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.

ரிஷபம்

குடும்பத்தினரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள்.

மிதுனம்

குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள். சிலர் உங்களை குறை கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தம் அடைவீர்கள்.

கடகம்

உங்களிடம் மறைந்துகிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.

சிம்மம்

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

கன்னி

புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.

துலாம்

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்தித்து மகிழ்வீர்கள். பழைய கடனை தீர்க்க புது வழி பிறக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணவரவு உண்டு.

விருச்சிகம்

குடும்பத்தினருடன் கலந்துபேசி, முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உறவினர்கள் உங்கள் பெருந்தன்மையை புரிந்துகொள்வார்கள்.

தனுசு

விட்டுக்கொடுத்து சில வேலைகளை முடிப்பீர்கள். நம்பிக்கை, உற்சாகம் கூடும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து உறவாடுவார்கள். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.

மகரம்

தேவையற்ற வருத்தம், அச்சம், மன சஞ்சலம் வந்து நீங்கும். குடும்பத்தினருடன் இணக்கமாக செல்வது நல்லது. மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம்.

கும்பம்

பண விஷயங்களில் சாக்குப் போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வேலைகளை உடனுக்குடன் முடிப்பீர்கள். திடீர் வெளியூர் பயணம், அலைச்சல், செலவுகள் ஏற்படும்.

மீனம்

குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். புது வீடு வாங்க திட்டமிடுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்