மேஷம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். மனைவிவழி உறவினர்களின் ஆதரவு கிட்டும். பணவரவு சரளமாக இருக்கும்.
ரிஷபம்: கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று வருந்துவீர்கள். உங்களின் அணுகுமுறையை மாற்றுவது நல்லது.
மிதுனம்: பணவரவு திருப்தி தரும். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.
கடகம்: குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். கடன் பிரச்சனைகளைத் தீர்க்க மாற்றுவழி காண்பீர்கள்.
சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். தாயின் உடல்நிலை சீராக இருக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
கன்னி: எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். சாதுர்யமான பேச்சுத் திறமையால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள்.
துலாம்: புது முயற்சிகள் வெற்றியடையும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சகோதரர் வகையில் நன்மை பிறக்கும்.
தனுசு: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் தொடர்ந்தபடி இருக்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். கலைப்பொருட்கள் சேரும்.
மகரம்: கணவன் - மனைவிக்குள் எதிர்பாராத வகையில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் தேவை.
கும்பம்: குழப்பம் நீங்கி திட்டவட்டமான முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்வீர்கள். வீட்டை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
மீனம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய கடனை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago