இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும்..

ரிஷபம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும்.

மிதுனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும்.

கடகம்: சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து போகும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள்.

சிம்மம்: அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். சுப செலவுகள் அதிகரிக்கும். திடீர் பயணங்கள் உண்டு.

கன்னி: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல் நிலை சீராக அமையும்.

துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். பழைய கடனை பைசல் செய்யுமளவுக்கு பணவரவு உண்டு. குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிட்டும். கையில் காசு பணம் புரளும்.

தனுசு: எதையோ இழந்ததைப் போல் கவலை வந்து நீங்கும். உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்துக்கு ஆளாக்குவார்கள். நெருங்கியவரிடம் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள்.

மகரம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சொந்த பந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும்.

கும்பம்: குடும்பத்தில் அமைதி நிலவும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சினைகளுக்கு மாற்றுவழி காண்பீர்கள். வெளியூரில் இருந்து நற்செய்திகள் வந்து சேரும்.

மீனம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். சகோதர, சகோதரிகளால் உதவி கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்