இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும்.

ரிஷபம்: புது முடிவுகள் எடுப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். விருந்தினர் வருகை உண்டு.

மிதுனம்: எதிர்மறை விமர்சனங்களைக் கண்டு அஞ்சாதீர்கள். உதவி செய்வதாக வாக்கு கொடுத்தவர்கள் இழுத்தடிப்பார்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

கடகம்: காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டியது வரும். நீண்டகால கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

சிம்மம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். திடீர் பயணம் உண்டு.

கன்னி: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

துலாம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: புதிய முயற்சிகள் இழுபறிக்குப் பின்னர் முடியும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். உடல் நலம் பாதிக்கக் கூடும். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

தனுசு: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டு.

மகரம்: உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசி மகிழ்வீர்கள். அரசு காரியங்களில் இருந்துவந்த இழுபறி நிலை மாறும். வெளியூர் பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் உண்டு.

கும்பம்: உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.

மீனம்: கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்திருந்த செய்தி வரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்