இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிலும் முன்னேற்றம் உண்டு. தைரியமாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்த பந்தங்களுடன் இருந்த மன வருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்: குடும்பத்தில் மனக்கசப்புகள் நீங்கி, கலகலப்பான சூழல் உருவாகும். உங்கள் ஆலோசனையை அனைவரும் கேட்டு நடப்பார்கள். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும்.

மிதுனம்: பெற்றோருடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால், பயணத்தில் நிதானம் தேவை.

கடகம்: சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படா தீர்கள். எதிலும் பொறுமை அவசியம். எதிர்பார்த்த தொகைகள் தாமதமாகும். உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

சிம்மம்: தொட்ட காரியங்கள் துலங்கும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வாகன வசதி பெருகும். வீடு கட்டுவதற்கான அனுமதி கிடைக்கும்.

கன்னி: உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

துலாம்: தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். புண்ணிய காரியங்கள், சுப காரியங்களை தலைமை தாங்கி நடத்துவீர்கள். பேச்சில் நிதானம் தேவை.

விருச்சிகம்: வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் மனஸ்தாபம், கருத்து மோதல், பிரச்சினைகள் வந்து நீங்கும்.

தனுசு: பழுதான வாகனம் சரியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

மகரம்: மனைவி வழியில் சில உதவிகள் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். அரசு, வங்கி தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை உண்டு.

கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அவர்கள் மூலமாக சில உதவிகள் கிடைக்கும். தெய்வீக சிந்தனைகள் அதிகரிக்கும். பணவரவு கூடும்.

மீனம்: ஆன்மிக நாட்டத்தால் அமைதி உண்டாகும். எதிர்காலத்தை ஊகித்து செயலாற்றுவீர்கள். மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். வெளி வட்டாரத்தில் மரியாதை கூடும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE