மேஷம்: உங்கள் தேவையறிந்து நண்பர்கள் உதவுவார்கள். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி கிட்டும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
ரிஷபம்: ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
மிதுனம்: அலைச்சல், டென்ஷன் இருக்கும். ஆங்காங்கே பகை உணர்வு உண்டாகும். உங்களின் முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்க நேரிடும். தாயாருடனும் கருத்து மோதல் வரும்.
கடகம்: குடும்பத்தில் சின்ன சின்ன விவாதங்கள் வரும். சகோதரர்களால் டென்ஷன், ஏமாற்றம் ஏற்படக் கூடும். மறைமுக எதிரிகள் முளைப்பார்கள். வாகனம் திடீர் செலவு வைக்கும்.
சிம்மம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். முகப்பொலிவுடன் காணப்படுவீர்கள். இழுபறியாக இருந்த சில காரியங்களை இன்று முடிப்பீர்கள்.
கன்னி: சோம்பல், களைப்பில் இருந்து விடுபட்டு சுறுசுறுப்படைவீர்கள். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். வாகனம் வாங்குவீர்கள். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.
துலாம்: எதிலும் வெற்றி, மகிழ்ச்சி உண்டு. பணவரவும் திருப்திகரமாக இருக்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சேமிக்கும் எண்ணம் தோன்றும்.
விருச்சிகம்: பிள்ளைகளுக்கு கொஞ்சம் அலைச்சலும், ஆரோக்கிய குறைவும் வந்து போகும். திடீர் பயணங்களும், செலவுகளும் அடுத்தடுத்து ஏற்படும். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு உண்டு.
தனுசு: உங்கள் செயலில் வேகம் கூடும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.
மகரம்: நினைத்த காரியங்களெல்லாம் சுலபமாக நிறைவேறும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். சிலர் புது வீட்டுக்கு மாறுவார்கள்.
கும்பம்: வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். வீடு வாங்குவது, விற்பது நீங்கள் எதிர்பார்த்த விலைக்கு முடியும்.
மீனம்: விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள். வீட்டு பராமரிப்பை மேற்கொள்வீர்கள். திடீர் பயணம் உண்டு.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago