இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து செல்லுங்கள். அடுத்தவர்களைக் குறை கூறுவதை நிறுத்துங்கள்.

ரிஷபம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்ட வேண்டாம். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடவோ, உத்தரவாதம் தரவோ வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள்.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவரின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும்.

கடகம்: சிந்தனைத் திறன் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பழைய பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடும். திடீர் பயணம் உண்டு.

சிம்மம்: தடைபட்ட வேலைகளை மளமளவென்று முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் நன்மை உண்டு. வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

கன்னி: உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.

துலாம்: நிர்வாகத் திறமை வெளிப்படும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். திடீர் பயணம் உண்டு.

தனுசு: பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிப்பீர்கள். நீண்டநாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். நட்பு வட்டம் விரியும். வீட்டை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள்.

மகரம்: அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். கலைபொருட்கள் சேரும்.

கும்பம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாகன வசதி பெருகும். சொத்துப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

மீனம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். இழுபறியாக இருந்த சொத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்