இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: உங்கள் நிர்வாகத் திறமை கூடும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு, இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு, பொருள் வரவு உண்டு.

ரிஷபம்: காலை 11 மணி வரை எதிலும் கவனத்துடன் செயல் படுங்கள். பிற்பகல் முதல் மன உளைச்சல் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பணவரவு திருப்தி தரும்.

மிதுனம்: காலை 11 மணி முதல் ஒருவித சஞ்சலத்துடன் காணப்படு வீர்கள். குடும்பத்தினரிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. கோபத்தால் வீண் இழப்புகள் ஏற்படும்.

கடகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று நடப்பார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும்.

சிம்மம்: கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டு பேசுவீர்கள். அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும்.

கன்னி: எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். உங்கள் நிர்வாகத் திறமை வெளிப்படும். பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிந்து உற்சாகப்படுத்துவீர்கள்.

துலாம்: அதிகம் உழைக்கவேண்டி வரும். முக்கிய பிரமுகர்களை சந்திப்பதால் ஆதாயம் உண்டு. தாயுடன் வீண் வாக்குவாதம் வந்து நீங்கும். பழைய பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்பீர்கள்.

துலாம்: அதிகம் உழைக்கவேண்டி வரும். முக்கிய பிரமுகர்களை சந்திப்பதால் ஆதாயம் உண்டு. தாயுடன் வீண் வாக்குவாதம் வந்து நீங்கும். பழைய பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்பீர்கள்.

தனுசு: காலை 11 மணி வரை எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். பிற்பகலுக்கு பிறகு கணவன் - மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும்.

மகரம்: குடும்பத்தில் காலை 11 மணி முதல் எதிர்பாராத செலவுகள் வந்துபோகும். சிறுசிறு அவமானங்கள், அவதூறுகள் ஏற்படக்கூடும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம்.

கும்பம்: எதிர்பார்த்த காரியங்கள் சற்று தாமதமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாருக்கும் ஜாமீன், சாட்சிக் கையெழுத்திடுவது வேண்டாம்.

மீனம்: மகான்கள், ஆன்மிகப் பெரியவர்களின் ஆசி கிடைக்கும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

2 days ago

மேலும்