மேஷம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கிய பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பாராத வகையில் ஆதாயம், நன்மைகள் உண்டாகும்.
**
ரிஷபம்: உறவினர்கள், நண்பர்களிடம் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வீணாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும்.
**
மிதுனம்: மனைவி வழியில் நல்ல சேதி உண்டு. புதியவர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் உண்டாகும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். காரியத்தில் நிதானம் தேவை.
**
கடகம்: அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல சேதி வரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். பேச்சில் பொறுமை அவசியம்.
**
சிம்மம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லைகள் குறையும்.
**
கன்னி: தடைகள், எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.
**
துலாம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும்.
**
விருச்சிகம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு.
**
தனுசு: பணம், நகை விஷயத்தில் கறாராக இருங்கள். வேலைகளை உடனுக்குடன் முடிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். திடீர் பயணங்கள், அலைச்சல், செலவுகளால் திணறுவீர்கள்.
**
மகரம்: முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். பால்ய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
**
கும்பம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் குடும்பத்தோடு கலந்துகொள்வீர்கள்-. பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள்.
**
மீனம்: உங்கள் போக்கில் நல்ல மாற்றம் தெரியும். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு. விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
2 days ago