மேஷம்: மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். குடும்பத்தினர் சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள். யாருக்கும் உத்தரவாதமோ, உறுதிமொழியோ தரவேண்டாம்.
ரிஷபம்: நீண்ட நாளாகத் தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.
மிதுனம்: தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும்.
கடகம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமை யும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத் தினரின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள்.
சிம்மம்: பணவரவு திருப்தி தரும். புதிய முயற்சிக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆசைகளை நிறை வேற்றுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
கன்னி: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தாயின் உடல்நிலை சீராக இருக்கும். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.
துலாம்: முகப்பொலிவுடன் காணப்படுவீர்கள். பாதியில் நின்று போன சில காரியங்களை இன்று முடிப்பீர்கள். கணவன் - மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். கலைப்பொருட்கள் சேரும்.
விருச்சிகம்: உறவினர்கள், நண்பர்களை அநாவசியமாக பகைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டியது வரும்.
தனுசு: உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப் பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பங் களை பூர்த்தி செய்வீர்கள். வாகனம் எதிர்பாராது செலவு வைக்கும்.
மகரம்: மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். திடீர் பயணம் உண்டு.
கும்பம்: கணவன் - மனைவி இடையே நிலவிய பனிப்போர் முடி வுக்கு வரும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப் படுவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கைக்கு வரும்.
மீனம்: பணப்பற்றாக்குறை நீங்கும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago