இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உங்களைச் சுற்றியிருப் பவர்களால் இருந்துவந்த தொந்தரவுகள் விலகும். உங்களின் செயல்பாடுகளில் சுறுசுறுப்பு அதிகரிக்கும்.

ரிஷபம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீங்கள் பார்க்க நினைத்த நபர், எதிர்பாராதவிதமாக உங்களை சந்திப்பார். கணவன் - மனைவி இடையே கருத்தொற்றுமை நிலவும்.

மிதுனம்: குடும்பத்தினரின் விருப்பங்களை உடனுக்குடன் நிறை வேற்றுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

கடகம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் கோபம், அலட்சியப் போக்கு மாறும். பழைய நினைவுகள் நெஞ்சில் நிழலாடும். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

சிம்மம்: எடுத்த வேலையை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

கன்னி: சொன்ன சொல்லைக் காப்பாற்ற அதிரடியாக செயல் படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும்.

துலாம்: நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர், நண்பர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். முன்கோபத்தைக் குறைப்பது நல்லது.

விருச்சிகம்: அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்களால் சங்கடங்கள் வரும். அரசு விவகாரங் களில் அலட்சியம் வேண்டாம். மருத்துவச் செலவு ஏற்படும்.

தனுசு: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். பணம் பல வகையிலும் வரும். பிரியமானவர்களுக்காக அதிக செலவு செய்வீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள்.

மகரம்: எண்ணம்போல் செயல்பட வேண்டும் என எண்ணுவீர்கள். தாயாரின் உடல்நிலை சீராக இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு காண்பீர்கள்.

கும்பம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். தடைபட்ட காரியங்களை உடனே முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடப்பார்கள்.

மீனம்: விரக்தியுடன் பேசுவீர்கள். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரின் செயல்பாடு எரிச்சலை ஏற்படுத்தும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்