இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: குடும்ப விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.

ரிஷபம்:  எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். கணவன் - மனைவி இடையே மனக்கசப்புகள் ஏற்படக் கூடும்.

மிதுனம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்து வேறுபாடு நீங்கும். விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

கடகம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களைச் சாதிப்பீர்கள். குடும்பத்தினரிடையே இருந்துவந்த கசப்புணர்வு நீங்கும். பணவரவு சரளமாக இருக்கும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

சிம்மம்: பழைய இனிய சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் நினைவாற்றல் பெருகும். மகளின் கல்யாணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி: வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள்.

துலாம்: சத்தமே இல்லாமல் சில வேலைகளை கச்சிதமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தன்னம்பிக்கை ஏற்படும்.

விருச்சிகம்: நம்பிக்கைக்குரியவர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சியைத் தரும்.

தனுசு: அதிரடியாகச் செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பணவரவு திருப்தி தரும். அரசாங்க காரியங்களில் வெற்றியுண்டு

மகரம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். பால்ய நண்பரை எதிர்பாராது சந்தித்து மகிழ்வீர்கள்.

கும்பம்: சகோதரர் வகையில் ஆதாயம் பெறுவீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சியுண்டு. புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்க முயல்வீர்கள்.

மீனம்: குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். நண்பர்கள், உறவினர்களின் உதவி கிட்டும். சகோதரர் வகையில் மகிழ்ச்சியுண்டு. அக்கம்பக்கத்தினரின் ஆதரவு பெருகும்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்