மேஷம்: கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். சகோதரர் வகையில் பிணக்குகள் வரும். வாகனம் பழுதாகக் கூடும்.
ரிஷபம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள். முகப்பொலிவுடன் காணப்படுவீர்கள். பாதியில் நின்ற சில காரியங்களை இன்று முடிப்பீர்கள்.
மிதுனம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள்.
கடகம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகள் நீண்டநாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். கலைப்பொருட்கள் சேரும்.
சிம்மம்: பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். பழைய நினைவுகளில் அடிக்கடி மூழ்குவீர்கள். பிற்பகலில் மகிழ்ச்சியான செய்தி வரும்.
கன்னி: தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். முக்கிய காரியங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
துலாம்: பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிவீர்கள். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் புகழ், கவுரவம் உயரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்களை ஒதுக்குவீர்கள். பழைய கடனைத் தீர்க்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
தனுசு: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் எதிர்பார்த்ததைவிட அதிகரிக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.
மகரம்: விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு, மரியாதை கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.
கும்பம்: பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.
மீனம்: முன்கோபத்தை குறைப்பது நல்லது. பண விஷயத்தில் கறாராக இருங்கள். நீண்ட நாட்களாகத் தடைபட்டிருந்த வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
57 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago