மேஷம்: குடும்பத்தினராலும், உறவினர், நண்பர்களாலும் சுபச் செலவுகள் அதிகரிக்கும் பேச்சில் நிதானம் தேவை. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலை ஒன்று முடியும்.
ரிஷபம்: ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்து கொள்வார்கள். மூத்த சகோதரரின் ஆதரவும் உதவியும் கிடைக்கும்.
மிதுனம்: மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவு எடுப்பீர்கள். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.
கடகம்: செல்வாக்கு கூடும். மகனுக்கு வெளிநாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சகோதரி உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார். கலைப்பொருட்கள் சேரும்.
சிம்மம்: விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து போகும். பணம், நகையைக் கவனமாக கையாளுங்கள். கொஞ்சம் நிதானித்து செயல்படுவது நல்லது. திடீர் பயணம் உண்டு.
கன்னி: மனோபலம் அதிகரிக்கும். கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீடு, வாகனத்தைச் சீர்செய்வீர்கள். அடகு வைத்திருந்த நகைகளை மீட்பதற்கு வழி பிறக்கும்.
துலாம்: பழைய மனை, வீட்டை விற்று புதுவீடு வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதரர் வகையில் உதவி கிடைக்கும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
விருச்சிகம்: வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
தனுசு: பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றுவீர்கள். தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.
மகரம்: தாயாரின் உடல்நலம் சீராகும். வீடு கட்ட வரைபட அனுமதி கிடைக்கும். விலகியிருந்த உறவினர்கள், நண்பர்கள் உங்களைப் புரிந்து கொண்டு வலிய வந்து பேசுவார்கள்.
கும்பம்: புதிதாக சொத்து வாங்குவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சாமர்த்தியமாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.
மீனம்: யாரையும் அநாவசியமாக பகைத்துக் கொள்ளாதீர்கள். வீண் சந்தேகம், தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடவோ, உத்தரவாதமோ தரவேண்டாம்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago