மேஷம்: உங்கள் மீது வீண் பழி வந்து நீங்கும். ஆன்மிகப் பயணம் சென்று வருவீர்கள். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.
ரிஷபம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். முக்கிய பொறுப்பில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். மூத்த சகோதர வகையில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி தங்கும்.
மிதுனம்: பங்குச் சந்தை வகையில் ஆதாயம் உண்டு. கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். வழக்கால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
கடகம்: குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். சொந்த பந்தங் களின் வருகை அதிகரிக்கும். மனைவி வழியில் உதவி உண்டு. பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள்.
சிம்மம்: திடீர் பயணங்கள், வீண் செலவுகள், தர்மசங்கடமான சூழல்கள் வந்து நீங்கும். அக்கம் பக்கத்தினரிடம் குடும்ப விஷயங்களை பேச வேண்டாம். ஆன்மிக நாட்டம் கூடும்.
கன்னி: மதிப்பு, மரியாதை உயரும். அறிஞர்களின் நட்பால் தெளிவு ஏற்படும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டு. பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தரும்.
துலாம்: எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும். எதிர்த்தவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.
விருச்சிகம்: தொட்டது எல்லாம் துலங்கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். வீடு, மனை வாங்குவீர்கள்.
தனுசு: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். பாதியில் நின்ற கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும்.
மகரம்: சாதுர்யமாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். வித்தியாச மாக யோசித்து, பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். காரியத்தில் நிதானம் தேவை.
கும்பம்: பண பலம் உயரும். உங்கள் விருப்பத்துக்கேற்ப வீடு, மனை வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
மீனம்: வேலைச்சுமை, முன்கோபம் அதிகரிக்கும். வீண், ஆடம்பர செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். ஆன்மிகம், யோகாவில் ஈடுபாடு ஏற்படும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
36 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago