மேஷம்: கடின உழைப்பால் காரியங்களைச் சாதிப்பீர்கள். மனப்போராட்டம் நீங்கி அமைதி ஏற்படும். சமயோசிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை சிறப்பாக முடித்து காட்டுவீர்கள்.
ரிஷபம்: பணவரவு அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும்.
மிதுனம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். அக்கம்பக்கத்தினருடன் அளவாகப் பழகுங்கள்.
கடகம்: வீடு, வாகனம் வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள். பழைய நகைகளை விற்று புதிய ஆபரணங்கள் வாங்குவீர்கள். விலகியிருந்த நண்பர்கள், உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.
சிம்மம்: ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான மின்சாதனங்களை மாற்றுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
கன்னி: வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தாயாரின் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். மனைவிவழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்: விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். கனிவான பேச்சால் காரியங்களைச் சாதிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
விருச்சிகம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். வரவேண்டிய பணம் இழுபறிக்குப் பின் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆடை,ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு: குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அனுபவப்பூர்வமாகவும், எதார்த்தமாகவும் பேசுவீர்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.
மகரம்: வேலைச்சுமையால் சோர்வாகக் காணப்படுவீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். அவ்வப்போது உடல்நிலை லேசாக பாதிக்கும். கலைப்பொருட்கள் சேரும்.
கும்பம்: வீண் அலைச்சல், திடீர் பயணம், அத்தியாவசியச் செலவுகள் ஏற்படும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.
மீனம்: வருமானம் உயரும். வருங்காலத் திட்டங்களில் ஒன்று பூர்த்தியாகும். கவுரவப் பொறுப்பு தேடி வரும். சொந்த ஊரில் மதிப்பு கூடும். வீட்டை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago