இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: நவீன மின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள்.

மிதுனம்: சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்கள் சிறப்பாக அமையும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள்.

கடகம்: அனுபவப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். விலகியிருந்த பழைய உறவினர், நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

சிம்மம்: ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். அக்கம்பக்கத்து வீட்டாரின் ஆதரவு பெருகும். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.

கன்னி: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருக்கு அசதி, சோர்வு வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும்.

துலாம்: பிரச்சினைகளுக்கு முக்கியத் தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். விருந்தினர் வருகை உண்டு.

விருச்சிகம்: கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். அழகு, இளமை கூடும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

தனுசு: சிலரின் விமர்சனத்துக்கும், கேலிப் பேச்சுக்கும் ஆளாவீர்கள். அடுத்தவர்களை குறைகூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். முன்கோபத்தை குறைப்பது நல்லது.

மகரம்: சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள்.

கும்பம்: எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். வீட்டை விரிவுபடுத்த எண்ணுவீர்கள்.

மீனம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்