இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். வியாபாரரீதியான பயணம் அலைச்சல் தரும். எதிலும் நிதானம் அவசியம்.

ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாகனத்தை மாற்றுவீர். நெடுநாட்களுக்கு பிறகு பால்ய நண்பர்களை சந்திப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் நிம்மதி கிடைக்கும்.

மிதுனம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

கடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் குழப்பங்கள் விலகும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிட்டும். அலுவலகத்தில் கடினமான பணியை சிறப்பாக செய்ததற்கு மேலதிகாரிகள் பாராடுவார்கள்.

சிம்மம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். மூத்த சகோதர வகையில் ஆதரவுண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி மதிப்பார். புதிய திட்டத்துக்கு தலைமை ஏற்பீர்கள்.

கன்னி: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பேச்சில் இனிமை பிறக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருகை தருவார்கள்.

துலாம்: குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போகவும். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகரீதியாக சில முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்.

விருச்சிகம்: கடந்த கால சுகமான அனுபவங்கள் மனதில் நிழலாடும். பணம் வரும். பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

தனுசு: பூர்வீகச் சொத்து வழக்கில் வெற்றி பெறுவீர். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவர். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் எளிதில் செய்து முடிப்பீர்.

மகரம்: பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். தாயாரின் உடல்நலம் திருப்தி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்று தீரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நன்று.

கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பணியாட்கள் அன்பாக நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும்.

மீனம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நம்பிக்கை தருவர். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரம் சிறக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

மேலும்