விருச்சிகம் ராசிக்கான விசுவாவசு வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - அனுபவம் கிட்டும்!

By Guest Author

விருச்சிகம்: ஏட்டறிவைவிடப் பட்டறிவு அதிகமுடைய நீங்கள், எளியவர்களுக்கு நேசக்கரம் நீட்டுபவர்கள். உங்கள் ராசிக்கு 12-ம் ராசியில் விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால் காசு, பணம் விரயம், வீண் அலைச்சல் என்ற நிலை உண்டானாலும் அதை சுப விரயமாக மாற்றிக் கொள்வீர்கள். ஆரோக்கியம் திருப்தி தரும். மே 14-ம் தேதி முதல் அஷ்டமத்து குருவின் காலம் தொடங்குகிறது. கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போகவும்.

வீண் வாக்குவாதம், சந்தேகம் வேண்டாம். படிப்பு மற்றும் வேலை சம்பந்தமாக பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பீர்கள். மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். திருமணத்தையும் சிறப்பாக நடத்திக் காட்டுவீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். குழந்தை பாக்கியம் உண்டாகும். சொந்த ஊரில் வீடு கட்டுவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினையை உடன் பிறந்தவர்களுடன் சேர்ந்து பேசி, முதலில் முடிக்கவும். விட்டுக் கொடுப்பதால் நன்மைதான். சகோதரர்களுடன் இணக்கமாக செயல்படவும்.

ஊர் பிரச்சினையை தீர்க்கிறேன் என்று முதலில் நிற்க வேண்டாம். சில நாட்களுக்கு விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நீங்கள் ஒன்று சொல்லப் போய் அது பலவிதமாக அர்த்தம் கொள்ளப்படும். கூடுமானவரை தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது உங்களுக்கு நல்லது.

குரு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். பணவரவு உண்டு. எனினும் கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனம் தேவை. அலைச்சலுடன் ஆதாயமும் உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களை அரவணைத்துச் செல்லுங்கள். வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன சுப காரியங்கள் மனதுக்கு நிம்மதி தரும். உங்களுக்கு நல்லது சொல்வதுபோல் கலகத்தை ஏற்படுத்திய உறவினர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வெகுநாட்களாக இழுபறியாக இருந்து வந்த பூர்வீகச் சொத்து, இப்போது கைக்கு வரும்.

சில பிரச்சினைகளுக்கு முடிவு தெரியாமல் தவித்த நிலை மாறி, இனி அதன் ஆணிவேரைக் கண்டறிந்து களையெடுப்பீர்கள். அம்மாவின் ஆரோக்கியம் பாதிக்கும். வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தம்பி, தங்கைகளால் அலைச்சல் இருக்கும். சிலர் வீடு மாற வேண்டிய சூழல் உருவாரும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். வெளிநாட்டு பயணம் அமையும். சிலர் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பார்கள். அக்கம் பக்கம் வீட்டாருடன் சுமுகமான நட்புறவு ஏற்படும்.

இல்லத்தரசிகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கணவரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை முறையாக செய்து முடிப்பீர்கள். வீட்டில் சிறுகச் சிறுக சேமித்த பணத்தைக் கொண்டு தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். மாமியார், மாமனார் உங்களின் திறமையை புரிந்துக் கொண்டு பெருமையாகப் பேசுவார்கள். கன்னிப் பெண்களுக்கு கல்யாணப் பேச்சு வார்த்தைகள் முன்னேற்றம் தரும்.

காலத்தில் திருமணம் செய்து கொள்வது நல்லது. இப்போது வேண்டாம், கொஞ்ச நாள் போகட்டும் என்று நாட்களை கடத்தாதீர்கள். நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கனவுத்தொல்லை, தூக்கமின்மை வரக்கூடும். மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வியில் வெற்றியுண்டு. இதுவரை படிப்பில் நாட்டமில்லாமல் இருந்து வந்த நீங்கள் இனி நல்ல மதிப்பெண்ணுடன் வெற்றி பெறுவீர்கள்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அதற்காக அவசரப்பட்டு பெரிய முதலீடுகளை போடவேண்டாம். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை ஏற்படும். பழைய சரக்குகளை புது யுக்தியால் விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்கள் இனி உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து வியாபாரம் செய்வது லாபத்தை இரட்டிப்பாக்கும்.

கூட்டுத் தொழிலில் புதிய பங்குதாரர்கள் அறிமுகமாவார்கள். கடையை மாற்றியமைப்பீர்கள். விளம்பர சாதனங்களை சரியாகப் பயன்படுத்தி விற்பனையை அதிகப்படுத்துவீர்கள். ஏஜென்ஸி, புரோக்கரேஜ் மற்றும் கல்வி நிறுவனங்களால் லாபமடைவீர்கள். கடல் வாழ் உயிரினங்கள், ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. சில அதிகாரிகளே ஆச்சரியப்படும் படி கடினமான வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். கேட்ட இடத்துக்கே மாற்றல் கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் குடும்ப விஷயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டாம். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். சென்ற முறை முக்கிய ஆவணத்தை தொலைத்து விட்டு தேடியதுபோல், இனி தேடிக் கொண்டிருக்காதீர்கள். எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது.

கணினி துறையினருக்கு வெளிநாட்டிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் பணி கிடைக்கும். அதிகம் கண் விழிப்பதையும், அர்த்த ராத்திரியில் உணவு உண்பதையும் தவிர்க்கப் பாருங்கள். கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். நெடுநாளாக மனக் கசப்பிலிருந்த சக கலைஞர்கள் இனி வலிய வந்து பேசுவர்.

மொத்தத்தில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு அனுபவங்கள் பல தந்து அதன் மூலம் உங்களைச் சீர்படுத்துவதாக அமையும்.

பரிகாரம்: மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மனை வணங்குங்கள். கோயில் உழவாரப் பணிக்கு உதவுங்கள். மாமரக்கன்று நட்டு பராமரியுங்கள். எல்லாம் இன்பமயமாகும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்