மேஷம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவார்கள். அலுவலகரீதியான பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பணி யாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.
ரிஷபம்: நினைத்தது நிறைவேறும். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை கண்டறிவீர். பிள்ளைகள் குடும்ப சூழலறிந்து செயல்படுவர். வியா பாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் இருந்த அலைச்சல், டென்ஷன் விலகும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கடகம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் போட்டி விலகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
சிம்மம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். டென்ஷன் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலகத்தில் தேடிய ஆவணம் கிடைக்கும்.
கன்னி: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். உத்தியோகரீதியாக பயணம் மேற்கொள்வீர்.
துலாம்: சுறுசுறுப்புடன் பணிகளை விரைந்து முடிப்பீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். வியாபாரம் ஏற்றம் தரும். அலுவலகத்தில் மதிப்புயரும்.
விருச்சிகம்: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர். தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகள் நம்பிக்கை தருவர். அலுவலகரீதியான பயணங்கள் சிறப்பாக அமையும். தொழிலில் போட்டிகள் குறையும்.
தனுசு: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபகாரியங்கள் கை கூடி வரும். பணவரவால் வீடு, வாகனத்தை மாற்றுவீர். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.
மகரம்: முக்கிய முடிவுகளை எடுக்கும்போது வீட்டு பெரியவர்களை கலந்து ஆலோசித்து செயல்படவும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் கிடைக்கும்.
கும்பம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். அலுவலகத்தில் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும்.
மீனம்: குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்து கொள் வீர். பிள்ளைகளால் பெருமையடைவீர். வழக்கில் இருந்த தேக்க நிலை மாறும். வியாபாரத்தில் விஐபிகளின் அறிமுகம் கிட்டும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.முக்கிய செய்திகள்
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago