மேஷம்: குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி திரும்பும். வெளிநாட்டு பயணத்துக்கான விசா கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாள்வீர்கள்.
ரிஷபம்: திருமண முயற்சிகள் பலிதமாகும். பயணங் களால் மகிழ்ச்சி தங்கும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். தொழில், வியா பாரத்தில் லாபம் சேரும்.
மிதுனம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் உடல்நிலை சீராகும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளை களால் பெருமை உண்டு.
கடகம்: காரியத்தடை, அலைச்சல், அசதி இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன சலசலப்புகள் வந்து நீங் கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். ஆன்மிக நாட்டம் கூடும்.
» அயோத்தி பாலராமர் நெற்றியில் சூரிய திலகம்
» கொச்சி | ஊழியர்களை சங்கிலியால் கட்டி நாய் போல நடக்க வைத்த கொடூரம்
சிம்மம்: புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும். பிள்ளை களின் உணர்வுக்கு மதிப்பளிப்பீர்கள். வியாபாரத்தில் நிதானமாக செயல்படுவது அவசியம்.
கன்னி: தீராத பிரச்சினையில் இருந்து விடுபட மாற்றுவழி கண்டறிவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். பண வரவு, பொருள் வரவு உண்டு.
துலாம்: வெளிப்படையாக பேசி காரியம் சாதிப்பீர்கள். மகிழ்ச்சி, உற்சாகம் கூடும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரி கள் பாராட்டுவார்கள்.
விருச்சிகம்: மனதுக்கு இதமான செய்தி வரும். உடல்சோர்வு நீங்கும். வயிற்றுவலி குணமாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்.
தனுசு: பணம், நகை, முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போட்டி இருந்தாலும் சமாளிப்பீர்கள், அலுவலக விஷயமாக வெளியூர் பயணம், அலைச்சல் இருக்கும்.
மகரம்: புதிய மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் பண உதவி கிடைக்கும். வாகன பழுது நீங்கும். முக்கிய நபர்களை சந்திப்பதால், தொழில் ரீதியாக அனுகூலம் உண்டு.
கும்பம்: வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்பாடா கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும்.
மீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வீண், ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். அலுவலக ரீதியான பிரச்சினைகள் ஓயும். பேச்சில் நிதானம் தேவை.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.முக்கிய செய்திகள்
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago