இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லை நீங்கும்.வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.

ரிஷபம்: பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்துச் செல்லவும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அலுவலகத்தில் யாரையும் குறை சொல்ல வேண்டாம்.

மிதுனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்கும் எண்ணம் மனதில் தோன்றும். பிள்ளைகளால் பெருமையடைவீர். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்கள் வருவர். உத்தியோகம் சிறக்கும்.

கடகம்: அரசு காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு.

சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடி வந்து பேசுவர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும். மதிப்பு உயரும்.

கன்னி: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர். ஆன்மிக நாட்டம் கூடும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.

துலாம்: வீண் அலைச்சல், காரியத் தடைகள் வரக்கூடும். வெளிவட்டாரத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் போட்டி இருக்கும். பங்குதாரரின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

விருச்சிகம்: பணவரவு உண்டு. பழைய கடன்களை பைசல் செய்வீர்கள். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.

தனுசு: பிரபலங்களை சந்திப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். மூத்த சகோதரர்கள் பாசமாக இருப்பர். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். பயணங்களால் ஆதாயமுண்டு.

மகரம்: கௌரவ பதவி தேடி வரும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சிலருக்கு புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவார்கள். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும். பதவி தேடி வரும்.

மீனம்: திட்டமிட்டவேலையை முடிக்க, வேகத்தை கூட்டுவீர். அரசால் அனுகூலம் உண்டு. விஐபிகளின் உதவியுடன் பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். உத்தியோகம் சிறக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்