இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு முக்கிய முடிவு எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அனுசரித்து செல்வீர்கள்.

ரிஷபம்: வீண் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும்.

மிதுனம்: நீண்டகாலமாக இழுபறியாக இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பணவரவு உண்டு. நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவியை செய்வீர்கள். தொழில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கடகம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளுக்கு நல்ல வழி காட்டுவீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். பொருட்கள் சேரும்.

சிம்மம்: தேவையற்ற அலைச்சல் காரணமாக, அசதி, செலவுகள் இருக்கும். உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

கன்னி: உங்கள் உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டு. வீண் குழப்பங்கள் நீங்கி தெளிவு, நம்பிக்கை பிறக்கும்.

துலாம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு கூடும். குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். வீட்டில் உள்ள பழைய பொருட்களை மாற்றுவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகள் நல்லபடியாக நிறைவேறும்.

விருச்சிகம்: அடிமனதில் இருந்த பயம் நீங்கி, துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் கூடும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

தனுசு: தேவையற்ற மன குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வெளியூரில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வருகை உண்டு. வீண் செலவு குறையும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள்.

மகரம்: உங்கள் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். பணவரவு உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பெற்றோர் உடல்நிலை சீராகும். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தந்தைவழியில் ஆதாயம் உண்டு. உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள், மகான்கள், பெரியோரை சந்திப்பீர்கள்.

மீனம்: பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். வீண்பயம், கவலைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். மின்னணு, மின்சார சாதனங்களை கவனமாக கையாளுங்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்