மேஷம்: மனதுக்கு பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வியாபாரரீதியாக சில முடிவுகள் எடுப்பீர். உத்தியோகத்தில் மேன்மையுண்டு.
ரிஷபம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர். அலுவலகத்தில் பொறுப்பு, பதவி தேடி வரும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். உங்கள் வார்த்தைக்கு மரியாதை கூடும்.
மிதுனம்: பழைய நினைவுகள் மகிழ்ச்சி தரும். குழப்பம் நீங்கி மனநிம்மதி பிறக்கும். வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கடகம்: மறைமுக அவமானம் ஏற்படும். பழைய கடனை நினைத்து வருந்தாதீர்கள். குடும்பத்தில் விட்டு கொடுத்து போகவும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் யாரையும் குறை கூற வேண்டாம்.
» பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது: தமிழகம் முழுவதும் 9.13 லட்சம் பேர் எழுதுகின்றனர்
சிம்மம்: சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தம்பதிக்குள் இருந்த சங்கடம் நீங்கி சந்தோஷம் வரும். வருமானத்தை பெருக்க வழி கிடைக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.
கன்னி: சொன்ன சொல்லைக் காப்பாற்ற கவனமாக செயல்படுவீர். தம்பதிக்குள் நிம்மதியுண்டு. பணவரவு உண்டு. அலுவலகரீதியான பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
துலாம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கி நிம்மதியான சூழல் ஏற்படும். உத்தியோகம் சிறக்கும். பங்குதாரர்களின் ஆலோசனைப்படி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.
விருச்சிகம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும். புது முயற்சிகளில் வெற்றி காண்பீர். தம்பதிக்குள் இருந்த கசப்புகள் விலகும். அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்ப்பீர்கள். வியாபாரரீதியாக வெளியூர் செல்வீர்கள்.
தனுசு: பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர். வீண் செலவுகளை தவிர்ப்பீர்கள். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர். வியாபாரரீதியாக விஐபிகளை சந்திப்பீர்.
மகரம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.
கும்பம்: திடீர் பயணங்கள், ஆழ்ந்த உறக்கமின்மை வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வந்து போகும். வியாபாரம், உத்தியோகத்தில் கவனம் தேவை.
மீனம்: திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர். பிள்ளைகளை பொறுப்புடன் வளர்க்க எண்ணுவீர். உடல்நலம் சீராகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் பிறரைப் பற்றி குறை கூற வேண்டாம்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.முக்கிய செய்திகள்
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago