இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: குடும்பத்தினரின் பேச்சுக்கு செவி கொடுங்கள். வீண் செலவுகள் வேண்டாம். எதற்கும் அவசரப்படாமல் செயல்படவும். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு.

ரிஷபம்: மனக் குழப்பங்கள் விலகும். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரரீதியான பயணம் திருப்தி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. யாரைப் பற்றியும் குறை கூற வேண்டாம்.

மிதுனம்: வெளிவட்டாரத்தில் அனுசரித்துப் போகவும். பணப் பற்றாக்குறை வந்து போகும். மனைவி வழி உறவினர்களால் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பீர்.

கடகம்: பேச்சில் ஒரு கம்பீரம் பிறக்கும். பழைய நண்பர்கள் தேடி வருவர். உங்களின் மாறுபட்ட அணுகுமுறையை கண்டு எல்லோரும் அதிசயிப்பர். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரம் சிறக்கும்.

சிம்மம்: வீண் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். உடல்நலம் நிம்மதி தரும். வருங்காலத்துக்காக சேமிப்பீர். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். உத்தியோகம் சிறக்கும்.

கன்னி: தடைபட்ட பணியை முடிப்பீர். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை கேட்டறிவீர். வியாபாரரீதியாக சிலரது உதவி கிட்டும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.

துலாம்: உடல் உஷ்ணம் அதிகரிக்கும். யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். வீண் செலவுகள் கையை கடிக்கும். உறவினர்களின் போக்கால் மனக்கசப்பு வரும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

விருச்சிகம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். உடல் ஆரோக்கியம் திருப்தி தரும். குடும்பத்தினர் உதவிகரமாக இருப்பர். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடக்கவும். வியாபாரம் லாபம் தரும்.

தனுசு: தம்பதிக்குள் நிம்மதியுண்டு. பணவரவு உண்டு. அதிரடியான முடிவுகள் எடுத்து உறவினர்களை வியக்க வைப்பீர். விருந்தினர் வருகையால் வீட்டில் சந்தோஷம் கிட்டும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

மகரம்: உற்சாகமான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். பணவரவு அதிகரிக்கும். முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரம் சூடு பிடிக்கும்.

கும்பம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். பொறுப்பு கூடும்.

மீனம்: அலைச்சல்,டென்ஷனிலிருந்து விடுபடுவீர். புது ஆடை, ஆபரணங்கள் சேரும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்