மேஷம்: உடன் பிறந்தவர்களுடன் மனவருத்தம் வரும். மின் சாதனங்களை கவனமாக கையாளுங்கள். புதிய முயற்சி தடைபடலாம். வியாபாரத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும்.
ரிஷபம்: பழைய நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
மிதுனம்: பிரபலங்களின் உதவி கிடைக்கும். அழகு சாதன பொருட்கள் வாங்குவீர். குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அலுவலக பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரம் சிறக்கும்.
கடகம்: வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். பிள்ளைகளால் மனநிம்மதி கிட்டும். பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். வருங்காலத்துக்கான முடிவு எடுப்பீர். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
சிம்மம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர். சேமிப்பு அதிகரிக்கும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும். வியாபாரம் நல்ல லாபம் தரும்.
கன்னி: பண விஷயத்திலும், குடும்ப விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிக்கவும். உடல் சோர்வு வரக்கூடும்.வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்வீர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
துலாம்: வீண் செலவுகளை கட்டுப்படுத்துவீர். அதிரடி திட்டங்களை தீட்டுவீர். ஆன்மிகவாதிகளுடன் சந்திப்பு நிகழும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் சக ஊழியருடன் இணக்கமான போக்கை கடைபிடிக்கவும்.
விருச்சிகம்: உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
தனுசு: அடிமனதிலிருந்த பயம் விலகும். துணிச்சலுடன் முடிவு எடுப்பீர். தம்பதிக்குள் அனுசரித்து போவீர்கள். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிளை உடனே முடிப்பீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாள்வீர்.
மகரம்: நெடுநாட்களாக தடைபட்டு வந்த காரியங்கள் முடியும். தம்பதிக்குள் மகிழ்ச்சியுண்டு. உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்.
கும்பம்: பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். அரசு விஷயங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
மீனம்: குடும்பத்தில் அமைதி நிலவும். நட்பு வட்டாரம் விரிவடையும். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வியாபார பிரச்சினைகளை சமாளிக்க வழி கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago