மேஷம்: குடும்ப உறுப்பினர்கள் இடையே இருந்த கருத்துவேறுபாடு விலகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
ரிஷபம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர். வியாபாரரீதியான பயணங்கள் திருப்தி தரும். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: திட்டமிட்ட காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பணவரவு உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும்.
கடகம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
» ஆளுநர் வெளிநடப்பு முதல் குரல் வாக்கெடுப்பு தீர்மானம் வரை: பேரவையில் நடந்தது என்ன?
» கருப்பை கண்டால் ஏன் முதல்வர் இவ்வளவு அச்சப்படுகிறார்? - இபிஎஸ் கேள்வி
சிம்மம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் உயர்ந்த இடத்துக்கு முன்னேறுவீர். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார்.
கன்னி: உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் இருக்கும்.
துலாம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். குடும்பத்தில் மனநிம்மதி பிறக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர். உத்தியோகம் சிறக்கும்.
விருச்சிகம்: மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர். வியாபாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.
தனுசு: மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றம் இருக்கும்.
மகரம்: புதிய எலெட்ரானிக்ஸ், கலை பொருட்கள் வீடு வந்து சேரும். பழைய நண்பர்களால் ஆதாயம் உண்டு. தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கும்பம்: நெடுநாளாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை செயல்படுத்திக் காட்டுவீர். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உயரதிகாரியின் ஆதரவு கிட்டும். வியாபாரம் சிறக்கும்.
மீனம்: யாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர். சகோதரர்களால் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடமாற்றம் இருக்க வாய்ப்பு உண்டு.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago