மேஷம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வீண் அலைச்சல்களிலிருந்து விடுபடுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
ரிஷபம்: மறைந்துகிடந்த திறமைகள் வெளிப்படும். மகளின் கல்யாண பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். பங்குதாரர்களின் ஆலோசனைப்படி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
மிதுனம்: பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர். நட்பு வட்டம் விரியும். பல நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர். வியாபாரத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.
கடகம்: எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும்.
» 7 மணி நேரம் காத்திருந்த அமலாக்கத் துறை அதிகாரிகள்: அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடந்தது என்ன?
சிம்மம்: நீண்ட நாள் குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். நீங்கள் விரும்பாத இடத்துக்கு மாற்றம் செய்யப்படலாம்.
கன்னி: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.
துலாம்: முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணைந்து செயல்படவும். மேலதிகாரி ஆதரிப்பார்.
விருச்சிகம்: முன்கோபத்தை தவிர்த்து அறிவுப்பூர்வமாக செயல்படுவீர். திடீர் முடிவுகள் எடுப்பீர். பிள்ளைகள் நம்பிக்கை தருவர். உடல்நலம் சீராகும். தந்தைவழியில் அனுகூலம் உண்டு. வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
தனுசு: மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர். தாயின் உடல்நலம் சீராகும். பணப் பற்றாகுறை விலகும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
மகரம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர். வீண் அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள்.
கும்பம்: தம்பதிக்குள் சிறு சிறு கருத்துமோதல்கள் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவு இருக்கும். சொந்த ஊரில் எதிர்ப்புகள் வரும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்ப்பீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
மீனம்: பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனையை கேட்கவும். பாக்கிகள் வசூலாகும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago