இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: திருமண பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். உறவினர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

ரிஷபம்: தடைபட்ட காரியம் முடியும். விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்கள் சாதகமாகும். சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றமுண்டு.

மிதுனம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியாகும். குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம்.

கடகம்: எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் விஐபிகளின் அறிமுகம் கிட்டும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.

சிம்மம்: வீண் குழப்பங்கள் விலகி வீட்டில் நிம்மதி பிறக்கும். பழைய கடன் பிரச்சினையை தீர்க்க வழி பிறக்கும். சகோதர வகையில் சுபச்செலவு உண்டு. உடல்நலம் சீராகும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

கன்னி: மனதைரியம் கூடும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். சாதுர்யமாக பேசி முக்கிய காரியங்களை சாதித்து காட்டுவீர். வியாபாரத்தில் சரக்குகள் விற்று தீரும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.

துலாம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அலுவலகரீதியான பயணத்தால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.

விருச்சிகம்: பிள்ளைகளுக்காக சேமிக்கத் தொடங்குவீர். வீடு, மனை வாங்குவதற்கான முயற்சியில் இறங்குவீர். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு அதிக வாடிக்கையாளர்களை பெறுவீர். உத்தியோகம் சிறக்கும்.

தனுசு: சவாலான விஷயங்களை சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். செல்வம், செல்வாக்கு கூடும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

மகரம்: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். விவாதம் தவிர்ப்பீர். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்.

கும்பம்: முகப்பொலிவு கூடும். உடற்சோர்வு நீங்கும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக நடந்து கொள்வார்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

மீனம்: சோர்வு, களைப்பு நீங்கி சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருப்பீர். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

மேலும்