இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாகனத்தை மாற்றுவீர். நீண்டநாட்களுக்கு பிறகு நண்பர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி கிட்டும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.

ரிஷபம்: மனக்குழப்பம் நீங்கும். வீடு வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உடன் பிறந்தவர்கள் பாசமாக இருப்பர். அலுவலகத்தில் புது பொறுப்புகள் ஏற்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.

மிதுனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரம் ஓரளவு லாபம் தரும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.

கடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். வீண் விவாதம் தவிர்ப்பீர்.

சிம்மம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வந்துசேரும். மூத்த சகோதர வகையில் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். இடமாற்றம் உண்டு.

கன்னி: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். பேச்சில் இனிமை பிறக்கும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருகை புரிவர்.

துலாம்: வெளிவட்டாரத்தில் புதிய நட்பு கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் எளிதாக முடித்துவிடுவீர்.

விருச்சிகம்: கடந்த கால சுகமான அனுபவங்கள் மனதில் நிழலாடும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். வியாபாரத்தில் பணியாட்கள் நன்றியுடன் இருப்பர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

தனுசு: உடல்சோர்வு, அலைச்சல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.

மகரம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். தாயாரின் உடல்நலம் திருப்தி தரும். வியா
பாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் மற்றவர் பணிகளையும் சேர்த்து செய்ய வேண்டியிருக்கும்.

கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பணியாட்கள் அன்பாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

மீனம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நம்பிக்கை தருவர். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்பீர்கள். நட்பால் ஆதாயமுண்டு. அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்