மேஷம்: இந்த புத்தாண்டு கட்டுக்கடங்காத செலவுகளை ஏற்படுத்தி, கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளினாலும், தன்னம்பிக்கையால் சாதிக்க வைப்பதாக அமையும்.
பரிகாரம்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வணங்குங்கள். ஒளவையார் அருளிய அகவலை தினமும் படியுங்கள். எலுமிச்சை மரக்கன்று நட்டு பராமரியுங்கள். ஏழைப் பிள்ளைகளுக்கு உதவுங்கள். எதிலும் வெற்றி கிட்டும். | முழுமையாக வாசிக்க > மேஷம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - உழைப்பு, தன்னம்பிக்கை..!
ரிஷபம்: இந்த ஆண்டு சின்னச் சின்ன சுகவீனங்களை தந்து பலவீனமாக்கினாலும், செல்வாக்கு, கவுரவத்தை அதிகம் தந்து சுறுசுறுப்பாக்கும்.
பரிகாரம்: திருப்பரங்குன்றத்து முருகனை சஷ்டி திதிகளில் வணங்குங்கள். கந்தர் சஷ்டி கவசம் படியுங்கள். மாமரக்கன்று நடுங்கள். ஏழைப் பெண்ணின் கல்யாணத்துக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். நல்ல பலன் மேலும் அதிகரிக்கும். | முழுமையாக வாசிக்க > ரிஷபம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - செல்வாக்கு, சுறுசுறுப்பு..!
» ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருப்பாவை முற்றோதுதல் மாநாடு: ஆயிரக்கணக்கான பெண்கள் வழிபாடு
மிதுனம்: இந்த 2025-ம் ஆண்டு வேலைச்சுமையையும், மனஅமைதியின்மையையும் தந்தாலும் உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்த்துவதாக அமையும்.
பரிகாரம்: தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் சென்று அங்குள்ள வாராஹி அம்மனை வழிபடுங்கள். தென்னை மரக்கன்று நடுங்கள். வாய் பேச இயலாத மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். நல்ல பலன்கள் அதிகரிக்கும். | முழுமையாக வாசிக்க > மிதுனம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - பலம், பலவீனம்..!
கடகம்: இந்தப் புத்தாண்டு புதிய படிப்பினைகளை தருவதாகவும், வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் கொஞ்சம் நெளிவு, சுளிவுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதாகவும் அமையும்.
பரிகாரம்: கும்பகோணத்துக்கு அருகிலுள்ள நண்டானூர் எனும் (திருந்துதேவன்குடி) கற்கடேஸ்வரரை வணங்குங்கள். ஏழ்மையின் நிலையில் இருக்கும் மாணவிக்கு படிப்புச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். முல்லைக் கொடி நடுங்கள். எதிலும் திருப்தி ஏற்படும். | முழுமையாக வாசிக்க > கடகம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - படிப்பினை, நெளிவு சுளிவு..!
சிம்மம்: இந்த 2025-ம் ஆண்டு போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தாலும், தன் கையே தனக்கு உதவி என்பதை உணர்த்துவதாக அமையும்.
பரிகாரம்: அண்ணாமலையாரை அமாவாசை திதியில் வணங்கி, கிரிவலம் வாருங்கள். அருணாசலப் புராணம் படியுங்கள். வன்னி மரக்கன்று நடுங்கள். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். சங்கடம் தீரும். | முழுமையாக வாசிக்க > சிம்மம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - தனித்திரு, விழித்திரு..!
கன்னி: இந்த 2025-ம் ஆண்டு உங்களை விஸ்வரூப மெடுக்க வைப்பதுடன், திடீர் யோகங்களையும், வெற்றியையும் அள்ளித் தருவதாக அமையும்.
பரிகாரம்: திருப்பதி வெங்கடாஜலபதியை ஏதேனும் ஒரு திங்கள்கிழமையில் சென்று வணங்குங்கள். சுப்ரபாதம் பாடுங்கள். சனிக்கிழமைகளில் வீட்டு விலங்குகளுக்கு அன்னமிடுங்கள். வேப்ப மரக்கன்று நடுங்கள். உங்களின் கனவுகள் நனவாகும். | முழுமையாக வாசிக்க > கன்னி ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - விஸ்வரூப வெற்றி..!
துலாம்: இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் உங்களை ஏமாற்றினாலும், மையப் பகுதியிலிருந்து உங்களை ஏற்றத்தில் உயர்த்தி விடுவதாக அமையும்.
பரிகாரம்: காரைக்குடி அருகிலுள்ள குன்றக்குடி மலைமீது வீற்றிருக்கும் முருகனை வழிபடுங்கள். கந்த சஷ்டி கவசம் படியுங்கள். செம்பருத்தி கன்று நட்டு பராமரியுங்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். நல்லதே நடக்கும். | முழுமையாக வாசிக்க > துலாம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - ஏற்றம், உயர்வு..!
விருச்சிகம்: இந்த 2025-ம் ஆண்டு எவ்வளவோ முயன்றும் முன்னுக்கு வராமல் முனகிக் கொண்டிருந்த உங்களை வெற்றி பெற வைப்பதுடன், எதிர்காலத் திட்டங்களையும் நிறைவேற்றும் விதமாக அமையும்.
பரிகாரம்: ஸ்ரீஆஞ்சநேயரை வணங்குங்கள். நாமக்கல் சென்று தரிசியுங்கள். வியாழக்கிழமையில் மாருதிக் கவசம் படியுங்கள். கட்டிட வேலை செய்யும் பெண்களுக்கு உணவு, உடை கொடுங்கள். பலா மரக்கன்று நடுங்கள். நற்பலன்கள் பெருகும். | முழுமையாக வாசிக்க > விருச்சிகம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - திட்டங்களில் வெற்றி..!
தனுசு இந்தப் புத்தாண்டு உங்களுக்கு பல சோதனைகளை தந்தாலும், எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டிய அவசியத்தையும், பணப்புழக்கம், செல்வாக்குடன் பதவியையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: கடலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகிலுள்ள பூவராகவ சுவாமியை (வராஹ அவதாரம்) சனிக்கிழமையில் சென்று வணங்குங்கள். துளசி நட்டுப் பராமரியுங்கள்.
முதியவருக்கு உதவுங்கள். மகிழ்ச்சி கூடும். | முழுமையாக வாசிக்க > தனுசு ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - செல்வாக்கு, பதவி..!
மகரம்: இந்த 2025-ம் ஆண்டு சின்ன சின்ன எதிர்ப்புகளையும், எதிர்பார்ப்புகளில் தாமதத்தையும் தந்தாலும் மாற்றுப் பாதையில் சென்று வெற்றி பெற வைக்கும்.
பரிகாரம்: திண்டிவனம் அருகிலுள்ள திருவக்கரை வக்ரகாளி அம்மனை நவமி திதிகளில் சென்று வழிபடுங்கள். எலுமிச்சை பழ மாலை சாற்றுங்கள். அபிராமி அந்தாதி படியுங்கள். கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். | முழுமையாக வாசிக்க > மகரம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மாற்றுப்பாதை, வெற்றி..!
கும்பம்: இந்த 2025-ம் ஆண்டு உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை காட்டிக் கொடுப்பதுடன், நீண்ட கால கனவுகள் அனைத்தையும் நனவாக்குவதாகவும் அமையும்.
பரிகாரம்: கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனத்தில் வீற்றிருக்கும் சரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமை சென்று வணங்குங்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உதவுங்கள். முடிந்தால் பழமையான கோயிலை புதுப்பிக்க உதவுங்கள். தனம் சேரும். | முழுமையாக வாசிக்க > கும்பம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - தெளிவு, நிஜம்..!
மீனம்: இந்த 2025 -ம் வருடம் உங்கள் செயல் வேகத்தை துரிதப்படுத்துவதுடன், புதிய முயற்சிகளில் வெற்றியையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரரை வணங்குங்கள். அங்குள்ள விபசித்து முனிவரின் பாதத்தில் அமர்ந்து தியானம் செய்யுங்கள். வேப்ப மரக்கன்று நடுங்கள். ஆதரவற்ற பெண்ணுக்கு உதவுங்கள். அனைத்திலும் வெற்றி கிட்டும். . | முழுமையாக வாசிக்க > மீனம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - வேகம், புதிய முயற்சி..!
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
23 mins ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago