இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: முக்கிய பணிகளை தள்ளிவைக்காமல், உடனுக்குடன் முடிப்பது நல்லது. கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதரர்களால் அலைச்சல் உண்டு. எக்காரியத்திலும் கவனம் தேவை.

ரிஷபம்: எதார்த்தமான வார்த்தைகளால் அனைவரையும் கவருவீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வழக்கில் வெற்றி கிடைக்கும்.

மிதுனம்: நீண்ட நாள் முயற்சிக்கு பலன் கிடைக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வீண் செலவை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

கடகம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். புதிய நபர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

சிம்மம்: திட்டமிட்டபடி பயணம் அமையும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடப்பார்கள். விலகி சென்ற நண்பர்கள், உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.

கன்னி: உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும். அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை தகர்த்தெறிவீர்கள்.

துலாம்: குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். பிள்ளைகளுக்கு காய்ச்சல், வயிற்றுவலி வந்து நீங்கும். வியாபாரத்தில் திடீர் முடிவுகள் வேண்டாம். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

விருச்சிகம்: பிரபலங்களின் சந்திப்பு நிகழும். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் விலகும். வீட்டு உபயோக பொருட்கள் சேரும்.

தனுசு: போட்டி, சவாலில் வெற்றி பெறுவீர்கள். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பிரபலங்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டு.

மகரம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். புதிய வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.

கும்பம்: அதிரடி திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சிலர் உங்களை தேடிவந்து உதவி கேட்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம், அனுகூலம் உண்டு.

மீனம்: யாரிடமும் பழைய பிரச்சினைகளை பேசக் கூடாது. அலுவலகத்தில் யாரையும் குறைகூட வேண்டாம். வாகன பயணத்தில் கவனம் தேவை. ஆன்மிகம், தியானத்தில் நாட்டம் செலுத்துங்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

30 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

மேலும்