இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: எதிலும் நிதானமாக இருக்கவும். தம்பதிக்குள் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். வியாபாரத்தில் போராடி பாக்கிகளை வசூலிப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள்.

மிதுனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பர். முக்கிய பிரமுகர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகம் சிறக்கும்.

கடகம்: எதிரிகளின் கொட்டம் அடங்கும். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலகரீதியான பயணம் திருப்தி தரும்.

சிம்மம்: உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர் யார் என உணர்வீர். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் இடமாற்றம் கிடைக்கும்.

கன்னி: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். பாக்கிகள் வசூலாகும்.

துலாம்: பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்க வாய்ப்பு உள்ளது. தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.

விருச்சிகம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். அலுவலகத்தில் உங்கள்கை ஓங்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்ப்பீர்.

மகரம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய சிக்கலில் ஒன்று தீரும். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.

கும்பம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர். சிந்தனைத் திறன் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு உண்டு.

மீனம்: எந்த காரியத்தை தொட்டாலும் அலைந்து முடிக்க வேண்டி வரும். நண்பர்கள், உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

ஜோதிடம்

6 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்