இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: குடும்பத்தில் நிம்மதியுண்டு. சகோதரர்களின் ஆதரவு கிட்டும். விருந்தினர், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பணியாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வர். உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகு முறையால் முடித்துக் காட்டுவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அக்கம் பக்கத்தினரின் அன்பு தொல்லை நீங்கும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் மதிப்புயரும்.

மிதுனம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டுவார். வியாபாரரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.

கடகம்: உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். பழைய பாக்கி வசூலாகும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

சிம்மம்: பூர்வீக சொத்து பிரச்சினை தொடர்பாக அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். பாக்கிகளை வசூலிக்க போராட வேண்டியிருக்கும்.

கன்னி: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். குலதெய்வம் கோயிலுக்கு சென்று வாருங்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

துலாம்: வேற்றுமொழி, மதத்தினர்களால் திருப்பம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு கூடும். வியாபாரம் லாபம் தரும்.

விருச்சிகம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த அயல் நாட்டு பயணம் சாதகமாக அமையும். தம்பதிக்குள் அனுகூலம் உண்டு. அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும்.

தனுசு: பொது அறிவை வளர்த்து கொள்வீர். பயணங்கள் திருப்தி தரும். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வுண்டு. யோகா, தியானத்தில் மனம் செல்லும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

மகரம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர். பணப் பற்றாக்குறையை சமாளித்துவிடுவீர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் கிடைக்கும். வியாபாரம் ஏற்றம் தரும்.

கும்பம்: அதிகம் உழைக்க வேண்டும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பயணங்களின்போது அதிக கவனம் தேவை. வியாபாரம் ஓரளவு லாபம் தரும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்.

மீனம்: மன இறுக்கம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகவும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் யாரை பற்றியும் குறை கூற வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

மேலும்