சிம்மம் ராசிக்கான 2025 புத்தாண்டு பலன்கள் முழுமையாக!

By Guest Author

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) சூரியனை ராசிநாதனாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே! இந்த ஆண்டு மனதில் உத்வேகம் உருவாகி உயர்வான செயல்களைச் செய்வீர்கள். முன்வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். நீங்கள் யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வர மாட்டீர்கள்.

குடும்பம்: கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். மூத்த சகோதரர் வழிசார்ந்த உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உருவாகும் . இதனால் மனம் மகிழ்ச்சி கொள்ளும். சமூக காரியங்களில் தலையிட்டு திறம்பட பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள். அரசு சார்ந்த மற்றும் தனியார் வங்கிகளின் உதவிகளை பெற்று வீடு மற்றும் மனைகளை வசதிக்கேற்ப மாறுதல் செயவீர்கள். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் உங்கள் எண்ணத்திற்கேற்ப நடந்து கொண்டு நற்பெயரை காப்பாற்றுவர்கள்.

வீடு மனைகள் வாங்கவும் அதனை அழகுபடுத்தவும் நல்வாய்ப்புகள் உண்டாகும். வாழ்க்கைத்துணையின் மூலம் நற்பலன்கள் தர உள்ளதால் அவரது பெயரில் புதிய சொத்து வாங்கும் யோகம் உள்ளது. குடும்ப ஒற்றுமை மேன்யைடையும். தந்தை வழி உறவினர்கள் தகுந்த உதவிகள் தருவார்கள். குலதெய்வ அருள் தகுந்த சமயத்தில் நல்வழிகாட்டும். புகைப்பிடிப்பது, மது போன்ற பழக்கங்களை விட்டு விடுவது நல்லது.

ஆரோக்கியம்: உடல்நலத்தில் பாதிப்பு வர வாய்ப்பு இருப்பதால், அதற்கு தகுந்த பயிற்சி முறைகளும் மருத்தவ சிகிக்சை முறைகளும் பின்பற்றி ஆரோக்கிய வாழ்வு பெறலாம். விஷப் பிராணிகளிடம் விலகி இருத்தல் நலம். உடல் நலத்தில் தகுந்த கவனம் வேண்டும்.

பொருளாதாரம்: குடும்ப அங்கத்தினர்கள் உங்களுக்கு சிறந்த ஒத்துழைப்பு தருவார்கள். ஒய்வுக்குகூட நேரமின்றி உழைப்பே பிரதானமாக செயல்படுவீர்கள். பணப் பிரச்சினை தீரும்.

உத்தியோகஸ்தர்கள்: உத்தியோகஸ்தர்கள் சகஊழியர்களிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் குறையும். உங்கள் செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும். இதனால் நற்பெயர் பெறுவீர்கள். மேலிடத்தின் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உங்களுக்கான அங்கீகாரம் உங்கள் எண்ணத்திற்கும் செயலுக்கும் புதிய உத்வேகம் தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் உண்டு. புதிய பதவிகளும் பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும். கடுமையாக உழைத்து பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

முடங்கிய செயல்களை மீண்டும் செய்ய முனைவீர்கள். முட்டுக்கட்டைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறுவீர்கள். அயல்நாடு சம்பந்தமான செயல்களிலும் ஈடுபடுவீர்கள். ஷேர் வகைகளின் மூலம் நல்ல ஆதாயத்தைக் காண்பீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் யோகா, பிராணாயாமம் போன்றவற்றை கற்பீர்கள். நிலுவையில் இருந்த பணம் உங்களுக்கு திரும்பக் கிடைக்கும். கடன் சுமைகள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை உண்டாகும்.

வியாபாரிகள்: வியாபாரிகள் தொழிலதிபர்களுக்கு தகுந்த லாபங்கள் கிடைக்கும். தங்கும் விடுதிகள், சுற்றுலா பஸ்கள், சுற்றுலா கைடுகள் ஆகிய தொழில் செய்பவர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பார்கள். தொழிலை அபிவிருத்தி செய்ய தேவையான நிதி உதவிகளை வங்கிகளில் தாராளமாக பெறுவார்கள். விருதுகளும் பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவார்கள். உணவுப்பொருள் உற்பத்தி செய்பவர்கள் புதிய ஆர்டர்கள் பெற்று தொழில் வளர்ச்சி காண்பார்கள்.

நவரத்தின கற்கள், தங்கம் வெள்ளி விற்பவர்களுக்கு பொன்னான காலமிது. மிகப்பெரிய ஆஸ்பத்திரிகளை நடத்துபவர்கள் வசதிகளை ஏற்படுத்தி கூடுதல் வருமானம் பெறுவார்கள். விவசாயப் பொருட்களை குத்தகை முறையில் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். கட்டுமான பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் சனியின் அருளால் வளம் பெறுவார்கள். தொழிலில் ஏற்பட்ட நிலுவை கடன்களை அடைப்பீர்கள். உங்கள் நிறுவனத்திற்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும்.

பெண்கள்: குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த பொருளாதார தடங்கல்கள் விலகும். செழிப்பான பணப்புழக்கம் ஏற்படும். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவர்கள் தங்கள் பணிகளில் திறமையான நிர்வாகம் செய்து உயரதிகாரிகளிடம் நற்பெயரும், பதவி உயர்வும் பெறுவார்கள். இனிமையாக பேசுதலும் சமூகத்தில் புகழ்பெறும் வாயப்புகளும் நிறைய உண்டு. வீட்டை அலங்கரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

அரசியல்வாதிகள்: சேவை செய்வதில் இருந்து வந்த மந்தமான நிலை மாறும். ஆன்மீக எண்ணங்களும் நாத்திக செயல்பாடுகளும் சமநிலையாக இருக்கும். கோயில்களுக்கான திருப்பணிகளில் நிறைவான பொருளாதார பங்களிப்பை உறவினர் மற்றும் நண்பர்களிடம் நன்கொடை பெற்று தன் பங்கையும் இணைத்து திருப்பணிக்கு வழங்குவார்கள்.

கலைஞர்கள்: கலைஞர்கள் தங்கள் திறமையை நன்கு பயன்படுத்தி ரசிகர்களிடம் புகழ் பெறுவார்கள். பொருளாதார வகையிலும் நிறைந்த முன்னேற்றம் பெறுவார்கள். தொழிலில் புதிய சாதனைகளை நிகழ்த்தி நற்பெயரும், பரிசும், பதக்கமும் பெறுவார்கள்.

மாணவர்கள்: முதல்தர மாணவராக தேர்ச்சி பெறுவார்கள். சகமாணவர்களின் பாடம் தொர்பான சந்தேகங்களுக்கு உதவும் வழியில் செயல்படுவீர்கள். தேவையான செலவுகளுக்கு பொருளாதாரம் கிடைக்கும். நற்பெயர் பெறுவீர்கள். கல்விக்கு உதவும் வகையிலான சுற்றுலாகளில் பங்கு பெறுவீர்கள். பேச்சில் இனிமையை சேர்த்துக் கொள்ளுங்கள். உடல் நலத்தில் தகுந்த கவனம் செலுத்துவதால் மட்டுமே ஆரோக்கியம் பெற முடியும்.

மகம்: இந்த ஆண்டு குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். கவலை வேண்டாம். கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது. கடித போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். சுபகாரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். மனதிற்கு பிடித்த காரியங்கள் நடக்கும். அனைவரிடமும் சந்தோஷமாகப் பழகுவீர்கள். மனநிம்மதி உண்டாகும்.

பூரம்: இந்த ஆண்டு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழிற்சாலைகள் வைத்திருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள். வியாபார போட்டிகள் சாதகமான முடிவினைத் தேடித் தரும். கவலை வேண்டாம்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த ஆண்டு உங்களின் புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்வதற்கு கவனம் செலுத்துவீர்கள். அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும். மனதில் அமைதி பிறக்கும். உங்களது பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்யுங்கள். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். தனலாபம் உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.

பரிகாரம்: முடிந்த வரை வெள்ளிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி | அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 6

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்