கடகம் ராசிக்கான 2025 புத்தாண்டு பலன்கள் முழுமையாக!

By Guest Author

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) சந்திரனை ராசிநாதனாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே! இந்த ஆண்டு செல்வச் செழிப்போடு செல்வாக்கையும் உங்களுக்கு அள்ளித் தரும். அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். சேமிப்புகள் ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். திட்டமிட்டுச் சரியாகச் செயலாற்றுவீர்கள். கடினமாக உழைத்து லாபமடைவீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் உண்டாகும்.

குடும்பம்: உங்கள் பேச்சில் வசீகரமும் இனிமையும் வேதாந்த ரகசியங்களும் கலந்து இருக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப்பெறும். தாயின் உடல் நலத்தில் சிறுசிறு தொந்தரவுகள் உண்டாகி நல்ல பராமரிப்பின் காரணமாய் உடல் நலம் பெறும். பூர்வ புண்ணிய சொத்துக்கள் உங்களை வந்து சேரும். வெகுகாலம் தீராத பிரச்சினைகள் தரும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். உறவினர்கள் உங்களிடம் உதவிகளைப் பெற வருவார்கள். நடைமுறை செயல்பாடுகளை அறிந்து அதற்கேற்ப உதவலாம்.

திருமண வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு உறவினர் சார்ந்த வகையில் சில தடைகள் வந்து விலகும். வெளிநாடு சென்று திரும்பும் யோகம் அதிகம் உண்டு. உடல், உள்ளத்தின் நலம் ஆரோக்கியமாக இருக்கும். பிள்ளைகள் சார்ந்த வகையில் வீண் செலவுகளை செய்யும் நிலை உருவாகி பின்னர் நீங்கிவிடும். குடும்ப ஒற்றுமையில் குழப்பங்கள் ஏற்பட்டு பின்பு சரியாகும்.

பொருளாதாரம்: பொருளாதாரம் மிகவும் சீராக இருக்கும். கடன் பிரச்சினை அனைத்தும் தீரும். பணப் பிரச்சினை தீர்வதற்கான வழிகள் ஏற்படும். நண்பர்கள் உறவினர்கள் மூலமாக தேக்க நிலை மாறும்.

ஆரோக்கியம்: உடல் நலத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.

பெண்கள்: பெண்கள் கைதொழில் ஒன்றை கற்றுக்கொண்டு தொழில் மேன்மை பெறுவார்கள். குறிப்பாக ஆடை வடிவமைப்பு, உணவு பண்டங்களை தயாரிப்பு, அழகு சாதன பொருட்கள் விற்பவர்கள் நிறைவான பொருளாதாரம் பெறுவார்கள். திருமண வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பெண்களுக்கு சரியான வரன் அமையும். குறித்த நேரத்தில் தடைகள் விலகி விடும். திருமணமான பெண்கள் கணவருடன் இருந்து வந்த மனபேதங்கள் விலகும்.

உத்தியோகஸ்தர்கள்: உத்தியோகஸ்தர்கள் தங்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக சுபமங்களச் செலவுகளை செய்யும் வாய்ப்புகள் உருவாகும். உங்களுக்கு தேவையான பொருளாதாரம் நிறைந்த வகையில் கிடைக்கும். நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மற்றவர்களால் வேதவாக்காக கருதப்படும். உங்களது நற்செயல்களால் புகழ் உண்டாகும். ஊழியர்களால் அதிகம் நேசிக்கப்படும் சூழ்நிலையும் உருவாகும். வீடு மனை வாகன வகைகளில் நல்ல லாப பலன்கள் நடந்து மனதை மகிழ்விக்கும். பிள்ளைகள் அதிகப்படியாக பணம் செலவழிக்கும் வாய்ப்புகளும் அதனால் தந்தை மகன் உறவு முறையில் சிறிது மனக்குறைவுகளும் உண்டாகி விலகும். எதிரிகளால் இருந்த இன்னல்கள் மாறி மனம் நிம்மதி பெறும். உடல் ஆரோக்கியமும் உயர்ந்திருக்கும். தந்தை வழியில் உள்ள சொத்துக்கள் ஆதாய பலன்களைத் தரும். பார்க்கும் உத்தியோகத்தில் முழு தன்னிறைவும் பாராட்டுகளும் கிடைக்கும்

வியாபாரிகள்: உணவுப் பொருட்கள், பர்னிச்சர் மற்றும் ஆடம்பரப் பொருட்களை உற்பத்தி செய்வோர் அதிக லாபங்கள் பெறுவார்கள். ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விற்பனையிலும் தகுந்த மேன்மை பெறுவார்கள். விருதுகள் பாராட்டுகள் பெறுவார்கள். ஏற்றுமதி தொழில் செய்வோருக்கு வெளிநாட்டிலிருந்து நிறைய ஆர்டர்கள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் சம்பந்தமான தொழில் செய்வோர் அபிவிருத்தி அடைவார்கள். எதிரிகளால் இருந்த மனக்கவலைகள் நீங்கி விடும்.

அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள் தங்கள் செயல்களைச் சாதனைகளாக மாற்றிக் காட்டுவீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் புதிய செயல்களைச் செய்து முடிப்பீர்கள். உங்கள் செயல்களில் ஏற்படும் இடையூறுகள் தானாகவே விலகி விடும். உங்கள் கருத்துக்களை அடுத்தவர்களிடம் திணிக்க முயல வேண்டாம். எதிரிகளின் சூழ்ச்சியால் இருந்த அவப்பெயர் நீங்கும். அரசாங்கம் மூலமாக தொழில் செய்பவர்கள் அரசு சார்ந்த அதிகாரிகளிடம் தகுந்த அனுசரணையுடன் அடைந்து ஏற்றம் பெறுவார்கள். அரசியலில் புதிய பிரவேசம் நிகழ்த்த இருப்பவர்கள் சனி பகவானின் நல்லருளைப் பலமாகப் பெற்று மக்களிடம் நற்பெயர் பெறுவார்கள்

கலைத்துறையினர்: கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். திறமைகள் பளிச்சிடும். நல்ல வருமானம் கிடைக்கும். சககலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு விருதுகள் கிடைக்கும். உங்களின் சமயோஜித புத்தியால் தக்க தருணத்தில் சரியான முடிவெடுப்பீர்கள். போதும் என்கிற மனநிறைவைப் பெறுவீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். உடன் பணிபுரிபவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடந்தாலும் அவர்களால் பெரிய நன்மைகள் உண்டாகாது. அநாவசியப் பேச்சுகளைத் தவிர்க்கவும். சினிமா சார்ந்த டெக்னீசியன்கள் நிறைய வேலை வாய்ப்பு பெறுவார்கள். மரத்தில் சிற்பங்களை வடிவமைக்கும் கலைஞர்கள் புதிய முயற்சிகளினால் வரவேற்பு பெறுவர்.

மாணவர்கள்: மாணவர்கள் கட்டடக்கலை, விவசாயம், மெக்கானிக்கல் துறையைச் சார்ந்த மாணவர்கள் சிறந்த வாய்ப்புகளை பெறுவார்கள். உற்சாகமான மனநிலையுடன் கல்வியில் ஈடுபடுவீர்கள். உடல் வலிமை பெற உடற்பயிற்சிகளையும், மனவலிமை பெற யோகா போன்றவைகளையும் மேற்கொள்வீர்கள். வருங்காலத் திட்டங்களுக்காக அடித்தளம் போடுவீர்கள். விளையாட்டுகளில் வெற்றிகளைக் காண்பீர்கள். உங்களின் தன்னம்பிக்கை படிப்படியாக உயரும். மேற்படிப்பிற்கு தேவையான பொருளாதார வசதிகள் தன்னிறைவாய் கிடைக்கும். மற்றவர்கள் பாராட்டும் வண்ணம் உங்கள் செயல்பாடுகள் இருக்கும்.

புனர்பூசம் 4ம் பாதம்: இந்த ஆண்டு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதுக்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை.

பூசம்: இந்த ஆண்டு ஆர்டர்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவிர்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மனதைரியத்தால் வெற்றி காண்பீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சினை குறையும். வீண் அலைச்சல், வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள்.

ஆயில்யம்: இந்த ஆண்டு எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வீண் செலவை உண்டாக்குவார். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேலதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய்க்கிழமைதோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன் | அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்