மேஷம்: முன்கோபம், வீண் அலைச்சல் வரக்கூடும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் தன்னிச்சையாக புது முடிவுகள் எடுக்க வேண்டாம். பயணங்கள் அலைச்சல் தரும். உத்தியோகத்தில் நிம்மதி கிட்டும்.
ரிஷபம்: தடைபட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு காண்பீர். வியாபாரத்தில் போட்டி குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர். மேலதிகாரி ஆதரிப்பார்.
மிதுனம்: விலையுயர்ந்த கலைப் பொருட்களை வாங்குவீர். மனைவிக்கு புது ஆடை ஆபரணங்களை வாங்கி கொடுப்பீர். வியாபாரத்தில் அதிரடியாக செயல்பட்டு லாபமீட்டுவீர்கள். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள்.
கடகம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். பூர்வீக வீட்டை விரிவு படுத்தி கட்டுவீர். உறவினருடன் இருந்து வந்த மோதல் விலகும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
சிம்மம்: பழைய பொன், பொருளை மாற்றிவிட்டு புதியன வாங்குவீர். மனைவியின் சகோதரர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் வரவேண்டிய பணம் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் கோபத்தை காட்டாதீர்.
கன்னி: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவர். வியாபாரத்தில் பணியாட்கள் ஆதரவாக இருப்பர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
துலாம்: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சு எடுபடும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். அலுவலகத்தில் சக ஊழியரின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்.
விருச்சிகம்: எதிர்பார்த்த வேலை விரைவாக முடியும். மகனுக்கு நல்ல வேலை அமையும். தூக்கமின்மை, மனஉளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர் தேடி வருவர். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரம் சிறக்கும்.
தனுசு: மனக்குழப்பம் தீரும். உடன் பிறந்தவர்களால் ஆதாயமுண்டு. பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவார்கள். தாயாரின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். உத்தியோகம் சிறக்கும்.
மகரம்: தடைபட்ட வேலையை உத்வேகத்துடன் செய்து முடிப்பீர். மகன், மகளின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். சொந்த ஊருக்கு செல்வீர். வியாபாரத்தில் பழைய பாக்கி அனைத்தும் வசூலாகும். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.
மீனம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக டென்ஷன் இருக்கும். குடும்பத்தினரிடம் அனுசரித்துச் செல்லவும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago