இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: வருங்காலத்துக்காக முக்கிய முடிவு எடுப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும் அலுவலகத்தில் மதிப்பு கூடும். மேலதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்.

ரிஷபம்: பணவரவால் கடனை அடைப்பீர். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பிள்ளைகளின் உடல் நிலை சீராகும். வாகன செலவு குறையும். வியாபாரத்தில் போட்டி குறையும். உத்தியோகம் சிறக்கும்.

மிதுனம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் கை கூடி வரும். தம்பதிக்குள் நெருக்கம் உண்டு. பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர். வியாபாரத்தில் ஏற்றம் உண்டு. அலுவலகரீதியான பயணம் திருப்தி தரும்.

கடகம்: திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். முன்கோபம் அதிகரிக்கும். தியானம் செய்வது நன்மை தரும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

சிம்மம்: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். எதிலும் கவனம் தேவை.வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் இடமாற்றம் இருக்கும்.

கன்னி: பழைய கசப்பான சம்பவம் மனதில் தோன்றி மறையும். குடும்பத்தில் நல்லது நடக்கும். வீட்டை விரிவு படுத்தி கட்டுவீர். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள்.

துலாம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். பணப் பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்: புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

தனுசு: நீண்ட நாளாக பார்க்காத ஒருவரை சந்தித்து மகிழ்வீர். தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். குடும்பத்துடன் சென்று சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள்.

மகரம்: குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர். வியாபார ரீதியாக திடீர் முடிவு எடுக்காதீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

கும்பம்: குடும்பத்தில் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வரக் கூடும். கையிருப்பு கரையும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

மீனம்: பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் குறை கூறாதீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்