இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: நீண்ட நாளாக எதிர்பார்த்த செய்திகள் வீடு தேடிவரும். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: வழக்கில் வெற்றி பெறுவீர். எதார்த்தமான வார்த்தைகளால் அனைவரையும் கவருவீர். பழைய கடனை பைசல் செய்வீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

மிதுனம்: பிள்ளைகளின் உயர்கல்வி, வேலை குறித்து யோசிப்பீர். புதிய முயற்சி வெற்றியடையும். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

கடகம்: நீண்ட நாள் முயற்சிக்கு இப்போது பலன் கிட்டும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு கூடும். பங்குதாரர்களின் ஆலோசனைப்படி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

சிம்மம்: திட்டமிட்டபடி பயணங்கள் அமையும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடப்பர். நண்பர்கள், உறவினர் தேடி வருவர். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

கன்னி: உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் போட்டியை தகர்த்தெறிவீர். அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும்.

துலாம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பிள்ளைகளுக்கு காய்ச்சல், வயிற்றுவலி வரக் கூடும். வியாபாரத்தில் திடீர் முடிவு வேண்டாம். அலுவலகத்தில் நீங்கள் தேடிய முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.

விருச்சிகம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில பணிகளை முடிப்பீர். தாயாருடன் இருந்து வந்த கருத்து மோதல் விலகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்று தீரும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

தனுசு: சவாலில் வெற்றி பெறுவீர். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

மகரம்: பிரபலங்களின் சந்திப்பு நிகழும். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மோதல் விலகும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கும்பம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்கள் தேடி வந்து உதவி கேட்பார்கள். வியாபாரரீதியான பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

மீனம்: பழைய பிரச்சினைகள் தொடர்பாக பேச வேண்டாம். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் இருக்கும். பங்குதாரர்களின் ஆலோசனைப்படி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் யாரையும் குறை கூறாதீர்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

52 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்