மேஷம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு அமையும். சகோதரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மையுண்டு.
ரிஷபம்: சுறுசுறுப்புடன் செயல்படுவதன் மூலம் காரியங்களில் வெற்றியுண்டு. குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோத்தில் இடமாற்றம் கிடைக்கும்.
மிதுனம்: வெளிவட்டார தொடர்பால் சில பணிகளை முடிப்பீர். குடும்பத்தாரிடம் மனம்விட்டுப் பேசுவீர். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரரீதியான பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகம் சிறக்கும்.
கடகம்: முகப் பொலிவுடன் காணப்படுவீர். முடியாமல் போன காரியங்களை முடிப்பீர். தம்பதிக்குள் மகிழ்ச்சி நிலைக்கும். அண்டை வீட்டாரின் ஆதரவுண்டு. வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
» ஜார்க்கண்டில் மீண்டும் முதல்வர் ஆகிறார் ஹேமந்த் சோரன்
» மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி சாதனை வெற்றி: 288 சட்டப்பேரவை தொகுதிகளில் 230 தொகுதிகளை கைப்பற்றியது
சிம்மம்: உடல்நலக் குறைவு, மனச்சோர்வு வரக்கூடும். திட்டமிட்டபடி வேலைகளை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.
கன்னி: மனநிறைவுடன் காணப்படுவீர். குடும்பத்தில் அனுசரித்து போவீர். பிள்ளைகளிடமிருந்த மனக்கசப்பு விலகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.
துலாம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபகாரியம் கூடி வரும். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். சகோதரர்களால் நன்மையுண்டு. வியாபாரத்தை விரிவு படுத்துவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
விருச்சிகம்: மறைமுக போட்டிகளுக்கு பதிலடி தருவீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.
தனுசு: தம்பதிக்குள் இருந்த கருத்துமோதல் விலகும். பயணங்கள் திருப்தி தரும். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு கூடும். கடனை தீர்க்க முயற்சிப்பீர். வியாபாரம், உத்தியோகத்தில் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும்.
மகரம்: விரயச் செலவுகள் கையிருப்பை குறைக்கும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் நிதானமாக செயல்படவும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். சக ஊழியர்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
கும்பம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாயாரின் மருத்துவச் செலவுகள் படிப்படியாக குறையும். வியாபாரத்தில் சரக்குகள் விற்று தீரும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
மீனம்: தடைபட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர். அலுவலகத்தில் யார் விஷயத்திலும் தலையிடாதீர்கள். வியாபாரம் சிறக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago