இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த பனிப்போர் மறையும். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு கூடும். திடீர் பயணம் உண்டு.

ரிஷபம்: கணவன் - மனைவிக்குள் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரக்கூடும். பிள்ளைகளின் உடல் நலத்தில் கூடுதல் அக்கறை காட்டுங்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்ததொகை கைக்கு வரும்.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.

கடகம்: வீட்டுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.

சிம்மம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அழகு, இளமை கூடும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். குடும்பத்துடன் ஆன்மிக பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.

கன்னி: குடும்பத்தில் நிலவிவந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். நீண்டநாட்களாக விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள்.

துலாம்: வீண் அலைச்சல், விரையச் செலவுகள் வரக்கூடும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

விருச்சிகம்: பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வீர்கள். வீடு மாற நினைத்தவர்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய வீடு அமையும்.

தனுசு: நீண்டகாலமாக இருந்துவந்த பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

மகரம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்களை முடித்து காட்டுவீர்கள். தந்தையாருடன் இருந்துவந்த கருத்துவேறுபாடு விலகும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வீண் விவாதங்கள் விலகும். ஆடை, ஆபரணங்கள் சேரும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தாயார் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்: தள்ளிப்போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிக்கு நாள்குறிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். முன்கோபத்தை தவிர்ப்பீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர். மூத்த சகோதரர் தக்க சமயத்தில் உதவுவார்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்