இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: உறவினர்கள், நண்பர்களால் வீண் செலவுகள் வரக்கூடும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். வியாபாரத் தில் ஓரளவு லாபம் உண்டு. வாகனத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணம் அலைச்சலைத் தரும்.

ரிஷபம்: பிரியமானவர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தினரிடம் மனம்விட்டுப் பேசுவீர்கள். தூக்கமின்மை நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம்: குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உடல் நிலை சீராகும். உறவினர்களின் வருகையுண்டு. வீண் விவாதங்கள் நீங்கும். லாபம் அதிகரிக்கும். பயணம் திருப்தி தரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்படும்.

கடகம்: விஐபிகளின் அறிமுகம் கிட்டும். வேற்றுமொழி. மதத்தினரால் ஆதாயம் உண்டு. குலதெய்வப் பிரார்த் தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.

சிம்மம்: கடனைத் தீர்க்க மாற்று வழி யோசிப்பீர்கள். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.

கன்னி: இழுபறிக்குப் பின்னர் சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். பயணங்களில் கவனம் தேவை. வாகனச் செலவு ஏற்படும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

துலாம்: பிரபலங்கள் சிலரை சந்திப்பதால் உங்கள் வாழ்வில் சில மாற்றங்கள் ஏற்படும். உடன் பணியாற்றுவோர் ஆதரவு உண்டு. ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் நிலவிய ஈகோ பிரச்சினை முடிவுக்கு வரும்.

விருச்சிகம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். நவீன மின் சாதனங்கள் வாங்குவீர்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும். அக்கம்பக்கத்தினரின் அன்பு தொல்லை உண்டு.

தனுசு: புதிய நண்பர்களால் ஆதாயமுண்டு. விருந்தினர் வருகை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி தங்கும். இழுபறியாக இருந்த அரசு வேலைகள் முடியும். மூத்த சகோதரர் உங்கள் உதவியை நாடுவார்.

மகரம்: குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் பாசமழையில் நனைவீர்கள். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு.

கும்பம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஊர் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

மீனம்: கணவன் - மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்று வீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள். பணவரவு உண்டு. வெளியூர் பயணத்தால் ஆதாயம் ஏற்படும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 mins ago

ஜோதிடம்

28 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்