மேஷம்: குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்குச் சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வாகனத்தை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிட்டும்.
ரிஷபம்: இன்று சந்திராஷ்டமம் என்பதால் குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். வாகனத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள்.
மிதுனம்: நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விலகியிருந்த பழைய சொந்தங்கள் வீடுதேடி வருவார்கள்.
கடகம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் செயலைப் பார்த்து மற்றவர்கள் வியப்பார்கள். குடும்பத்தில் நிம்மதி தங்கும். புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
» நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 25-ம் தேதி தொடக்கம்
» ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்க வழிகாட்டுதல்: 30 நாளில் உத்தேச தடையின்மை சான்று
சிம்மம்: நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். சிலருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
கன்னி: உங்கள் பேச்சில் தெளிவு பிறக்கும். சகோதர சகோதரிகளால் ஆதாயமுண்டு. முரண்டு பிடித்த பிள்ளைகள் இனி சொல்பேச்சு கேட்பார்கள். அம்மாவின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.
விருச்சிகம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உதவி நாடி வருவார்கள்.
தனுசு: இன்று சந்திரன் காலை 11 மணி வரை மூலத்திலும், அதன் பிறகு பூராடத்திலும் தொடர்வதால் முன்கோபம், டென்ஷன் இருக்கும். எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட இழுபறிக்குப் பின்னர் முடியும்.
மகரம்: உங்களின் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட வேலையை முடிப்பீர்கள். சகோதரி உங்கள் உதவியை நாடுவார். குடும்பத்துடன் புண்ணிய தலங்களுக்குச் செல்ல திட்டமிடுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.
கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர்கள். சொந்தபந்தங்கள் உங்களை பெருமையாகப் பார்ப்பார்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.
மீனம்: சாதுர்யமாகப் பேசி வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வங்கிக் கடனை தீர்க்க நல்ல வழி கிடைக்கும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago