மேஷம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். தம்பதிக்குள் மனம் விட்டு பேசுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் உயர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவீர்.
ரிஷபம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தந்தையின் உடல்நிலை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட காரியம் சாதகமாகும். உத்தியோகத்தில் மேன்மையுண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவர்.
மிதுனம்: வெகுநாட்களாக மனதளவில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். புது ஆபரணம், ஆடைகள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பணியாட்களின் ஆதரவு உண்டு. உத்தியோகம் சிறக்கும்.
கடகம்: எதார்த்தமான பேச்சால் தடைபட்ட செயலை முடிப்பீர். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் அனுசரணையாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
» தீப உற்சவத்தையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் 28 லட்சம் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை
» இந்தியா - சீனா படைகள் வாபஸ் பெறும் பணி நிறைவு: இன்று தீபாவளி இனிப்பு பரிமாற்றம்
சிம்மம்: பால்ய நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். தாய்வழி உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். உடல் உபாதைகள் நீங்கும். அலுவலகத்தில் மேலதிகாரி அன்பு காட்டுவார். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு.
கன்னி: எடுத்த வேலைகளை முடிப்பதில் தடுமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் பணிபுரிந்த பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
துலாம்: புதுப்புது எண்ணங்கள் மனதில் தோன்றும். குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. உடல் நலத்தில் அக்கறை காட்டவும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம், உத்தியோகம் திருப்தி தருவதாக இருக்கும்.
விருச்சிகம்: பொது காரியங்களில் ஈடுபடுவீர். குழப்பம் நீங்கி முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
தனுசு: குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வியாபாரரீதியாக சிலரை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்.
மகரம்: தடைபட்டு வந்த சுபகாரியம் விமரிசையாக நடக்கும். பால்ய நண்பர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பர். வியாபாரரீதியாக சில முக்கிய பிரபலங்களை சந்திப்பீர். புதிய வேலைக்கு முயற்சி செய்வீர்கள்.
கும்பம்: சுமுகமாக பேசி பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர். தாயார், பிள்ளைகளின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் அனுபவமிக்க பணியாட்கள் வருவர். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு மதிப்பு உண்டு.
மீனம்: தாய்வழி உறவினர்களால் மனக்கசப்புகள் வந்து போகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். முன்கோபத்தை தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டி இருக்கும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்கவும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago