மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்): கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், கேது - களத்திர ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகநிலை உள்ளது. கிரகமாற்றம்: 17.10.2024 அன்று சூரியன் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 23.10.2024 அன்று செவ்வாய் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: இந்த வாரம் ராசிநாதன் சுகஸ்தானத்திற்கு மாறுகிறார். தனது பார்வையால் ரணருண ரோக ஸ்தானம் - தொழில் ஸ்தானம் - லாப ஸ்தானம் ஆகியவற்றை பார்க்கிறார். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும். தருமசிந்தனை உண்டாகும். பணநெருக்கடி குறையும்.
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு பணத்தேவை பூர்த்தியாகும். கலைத்துறையினருக்கு மனதில் குழப்பம் நீங்கும். அரசியல் துறையினருக்கு வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும்.
அசுபதி: இந்த வாரம் மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம். எந்த காரியத்தையும் ஆலோசித்து செய்வது நல்லது. ஆன்மீக போக்கு மனதிற்கு நிம்மதியைத் தரும். மேலிடத்தில் கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள்.
பரணி: இந்த வாரம் அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
கார்த்திகை - 1: இந்த வாரம் எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். இருந்து வந்த நீண்ட நாள் வேலைகளை முழுமூச்சுடன் முடிப்பீர்கள்.
பரிகாரம்: முருகனை வணங்க குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை தீரும். காரியவெற்றி உண்டாகும். | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்): கிரகநிலை: ராசியில் குரு(வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - பஞசம ஸ்தானத்தில் சூர்யன், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் - சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகநிலை உள்ளது. கிரகமாற்றம்: 17.10.2024 அன்று சூரியன் பஞசம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 23.10.2024 அன்று செவ்வாய் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் ராசியைப் பார்க்கிறார். மிகவும் அனுகூலமான காலகட்டம். மாற்றங்கள் வந்து சேரும் நேரமிது. சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். தொழில் ஸ்தானத்தில் குரு இருக்கிறார். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள்.
நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கிலேசங்களில் தெளிவான நிலை ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது.
வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் சிறு மனத்தாங்கல்கள் வரலாம். பெண்களுக்கு எதிர்ப்புகள் நீங்கும். கலைத்துறையினருக்கு ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் நல்ல பலன்களே வரும். அரசியல் துறையினருக்கு உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும்.
கார்த்திகை - 2, 3, 4: இந்த வாரம் உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடும் போது கவனத்துடன் இருப்பது நல்லது. வாழ்க்கை தரம் உயரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எல்லாவற்றிலும் மனகவலை ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை.
ரோகினி: இந்த வாரம் தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம். திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவு உண்டாகும். மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல்நலத்தில் கவனம் தேவை.
மிருகசீரிஷம் - 1, 2: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் கவனமாக இருப்பது லாபம் அதிகரிக்க செய்யும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.
பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி கிடைக்கும். | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்): கிரகநிலை: ராசியில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சூர்யன், கேது - பஞசம ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் குரு(வ) என கிரகநிலை உள்ளது. கிரகமாற்றம்: 17.10.2024 அன்று சூரியன் சுக ஸ்தானத்தில் இருந்து பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 23.10.2024 அன்று செவ்வாய் ராசியில் ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: இந்த வாரம் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு செவ்வாய் மாறுகிறார். அனுகூலங்கள் வந்து சேரும். பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும்.
விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரத்தால் வாக்கு வன்மையால் நன்மையை தரும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு, வீண் அலைச்சல் குறையும். எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும்.
சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். அதே நேரத்தில் அவர்களால் செலவும் வரும். பெண்களுக்கு உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். கலைத்துறையினருக்கு காரிய வெற்றி உண்டாகும். அரசியல்துறையினருக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் நீங்கும்.
மிருகசீரிஷம் - 3, 4: இந்த வாரம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
திருவாதிரை: இந்த வாரம் திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. அலைச்சலால் உடல் சோர்வு ஏற்படலாம். ஆன்மீக நாட்டம் மனதிற்கு நிம்மதியைத் தரும். குல தெய்வ தலங்களுக்கு சென்று வருவது மனதிற்கு அமைதியைத் தரும். வாழ்க்கைத்துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை.
புனர்பூசம் - 1, 2, 3: இந்த வாரம் உங்கள் வியாபாரத்தை சீரமைப்பதற்கு சுயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும். காரிய அனுகூலம் உண்டாகும். சிந்தித்துச் செயல்படுவது நன்மை தரும். உடனிருப்பவருகள் உங்களுக்கு உதவுவார்கள். லாபம் அதிகரிக்கும். விற்பனை அமோகமாகும்.
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கி வர துன்பங்கள் விலகி இன்பங்கள் தேடி வரும். | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago