இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: நீண்ட நாளாக எதிர்பார்த்த நல்ல செய்திகள் வீடு தேடிவரும். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும் சகோதரர்களின் ஒத்துழைப்பு உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவர். உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: எதார்த்தமான பேச்சால் சிலரை கவருவீர். பழைய கடனை பைசல் செய்வீர். நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவர். வழக்கில் வெற்றி பெறுவீர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மிதுனம்: புதிய முயற்சி வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, வேலை குறித்து யோசிப்பீர். வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

கடகம்: பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவர். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர். வியாபாரத்தில் போட்டிகளை தகர்த்தெறிவீர். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்.

சிம்மம்: திட்டமிட்டபடி பயணம் அமையும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். பிள்ளைகள் பொறுப்பாக நடப்பர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கன்னி: குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போகவும். பிள்ளைகளுக்கு உடல் உபாதைகள் வர வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் திடீர் முடிவுகள் எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

துலாம்: நீண்ட நாள் முயற்சிக்கு இப்போது பலன் கிட்டும். செலவைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு கூடும். பங்குதாரர்களின் ஆலோசனைப்படி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.

விருச்சிகம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர். தாயாருடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.

தனுசு: சவாலில் வெற்றி பெறுவீர். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பர். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரரீதியாக பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

மகரம்: அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு விலகும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

கும்பம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடி வந்து சிலர் உதவி கேட்பார்கள். அலுவலகரீதியான வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரம் சிறக்கும்.

மீனம்: பழைய பிரச்சினைகள் தொடர்பாக யாரிடமும் எதுவும் பேச வேண்டாம். ஆன்மிகத்தில் ஈடுபடவும். அலுவலகத்தில் யாரையும் குறை கூட வேண்டாம். வியாபாரரீதியாக பல போட்டிகளை சந்திக்க நேரிடும்.

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்