கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ செப்.26 - அக்.2

By Guest Author

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் வெற்றி உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் நல்லபடியாக நடக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வரும். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை சமாளித்து விடுவீர்கள். ஒவ்வொரு காரியத்தையும் கவனமாக செய்வீர்கள்.

பெண்களுக்கு எந்த ஒரு விவகாரத்தையும் எதிர்கொள்ளும் மன வலிமை உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆசிரியர்களிடம் பாராட்டு பெறுவீர்கள்.

பரிகாரம்: அம்பாளுக்கு வெள்ளை நிற பூவில் அர்ச்சனை செய்யுங்கள். வாழ்வில் ஏற்றம் உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் எதிர்பாராத காரியங்கள் நடந்தேற வாய்ப்புண்டு. வெற்றியால் மனம் மகிழ்ச்ச்சியில் திளைக்கும். கடந்த காலத்தில் இருந்த துன்பங்கள் சற்றென்று விலகும். முயற்சிகள் நல்ல பலன்களைத் தரலாம். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

கடன் பிரச்சினைகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் எதை பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த பிரச்சினைகள் சாதகமான முடிவு பெறும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற அதிகமாக படிக்க வேண்டி இருக்கும். கல்வி தொடர்பான பிரச்சினைகள் குறையும்.

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். மனதில் அமைதியும் நிம்மதியும் கிடைக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சூரியன், புதன், கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் எதிர்பார்த்த விஷயங்கள் சற்று தாமதமாக ஏற்பட்டாலும் முடிவில் சாதகமாக முடியும். மனதில் துணிச்சல் ஏற்பட்டு தைரியத்துடன் எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான வங்கிக் கடன்களும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

தேவையான உதவிகளும் நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். எதிர்பார்த்த நன்மையை விட கூடுதலான நன்மையான செய்திகள் வரக்கூடும்.உங்களது எண்ணப்படியே காரியங்கள் அனைத்தும் நடக்கும். குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பார்கள்.

பெண்களுக்கு ஏற்படும் செலவுகளை குறைக்க திட்டமிடுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் கவுரவம் உயரும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியருடன் கலந்து கொள்வது நல்லது. உயர் கல்விக்கு விண்ணப்பித்தோருக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும்.

பரிகாரம்: புதன்கிழமை ஸ்ரீநாராயணீயம் சொல்லி வாருங்கள். எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும். நன்மைகள் நடக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்