மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ செப்.26 - அக்.2

By Guest Author

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் தன்னுடைய தேவைகளை தானே செய்து கொள்வீர்கள். மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து வெற்றி காண்பீர்கள். புத்திசாதுரியமும், வாக்கு வன்மையும் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய திருப்பங்கள் உண்டாகும். நல்ல மனிதர் ஒருவரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையில்லாமல் அறிவுரை வழங்குவதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பெண்கள் எந்த ஒரு வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். தேர்வுகள் சாதகமாக பலன் தரும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு கந்தர்சஷ்டி கவசம் படிக்க எல்லா பிரச்சினைகளும் தீரும். காரிய வெற்றி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடுமையான முயற்சிகள் உங்களின் வெற்றிக்கு வழிவகுக்கும். வீண் அலைச்சல் ஏற்படலாம். கவனம் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத லாபம் ஏற்படும்.

வாகனங்களில் செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலகம் தொடர்பான பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது.

வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். பெண்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிரிகளின் தொல்லை அறவே இருக்காது. மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் படிப்புகள் உங்களுக்கு கை கொடுக்கும்.

பரிகாரம்: மகாலட்சுமியை தீபம் ஏற்றி வழிபட்டு வர செல்வம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சந்திரன், செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் உறவுகளுக்கு அதிக முக்கியத்தும் கொடுப்பீர்கள். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்கள் மீதான நம்பிக்கை மேலோங்கும். அனைவருக்கும் உதவி செய்வீர்கள். உறவினர்கள் உங்கள் இல்லத்திற்கு வந்து செல்வார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் புதிய யுக்தியை கையாளுவீர்கள். அதற்கு தேவையான பண வசதியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வெளியூர் பயணம் செல்ல நேரலாம் அதனால் உங்களுக்கு நன்மையே. அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும்.

வீட்டிற்குத் தேவையான பொருட்கள் கிடைக்கும். சிலர் குடும்பத்துடன் வெளியூர் சென்று வருவீர்கள். பெண்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். இல்லத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் இருக்கும். மாணவர்கள் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது. சக மாணவர்களின் உதவி கிடைக்கும். .

பரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு சென்று அவல் நைவேதனம் செய்யுங்கள். ஏழைகளுக்கு உதவுங்கள் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்