இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: தம்பதிக்குள் மனம் விட்டுப் பேசி சிறு சிறு கருத்து மோதல் வந்தாலும் சமாளிப்பீர். உடல் சோர்வு, அலைச்சல் வந்து போகும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. உத்தியோகத்தில் புதிய பதவி கிடைக்கும்.

ரிஷபம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும். புது முயற்சிகளில் வெற்றி காண்பீர். தம்பதிக்குள் இருந்த மனக்கசப்பு விலகும். வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மிதுனம்:குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு, கூடும். வெளிவட்டாரத்தில் கவுரவ பதவி தேடி வரும். மகிழ்ச்சிகரமான சூழல்கள் நிலவும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பர். வியாபாரம் சிறக்கும்.

கடகம்: இல்லத்தில் அடிப்படை வசதிகள் பெருகும். சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். முக்கிய பிரமுகர்களின் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

சிம்மம்: தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் கைகூடி வரும். ஓரளவு பணவரவு உண்டு. பூர்வீக வீட்டை சீரமைப்பீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

கன்னி: காரியத் தடைகள், அலைச்சல் வந்து போகும். குடும்பத்தினரால் வீண் செலவு உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டிவரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நன்மை தரும்.

துலாம்: எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் மனப் பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அலுவலகரீதியான பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர். வியாபாரத்தில் லாபம் உண்டு.

விருச்சிகம்: குடும்பத்தில் நிம்மதி தங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்க தொடங்குவீர். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

தனுசு: இங்கிதமாக பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். முகத்தில் தேஜஸ் கூடும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

மகரம்: சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தம்பதிக்குள் இருந்து வந்த சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் வரும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார். உத்தியோகம் சிறக்கும்.

கும்பம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்வீர். பணவரவு உண்டு. நல்லவர்களை அடையாளம் காண்பீர். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

மீனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்