இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர். தாயின் உடல் நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

ரிஷபம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரம் ஓரளவு லாபம் தரும்.

மிதுனம்: பணவரவு திருப்தி தரும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். அக்கம் பக்கம் வீட்டினரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் ஏற்றம் உண்டு. அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம்.

கடகம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். பூர்வீக சொத்து தொடர்பான சிக்கல்கள் விலகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும்.

சிம்மம்: சில காரியங்களை போராடி முடிப்பீர். பிள்ளைகளிடம் அநாவசியமாக கோபப்படாதீர். புதிய பங்குதாரின் ஆலோசனைப்படி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

கன்னி: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர். முன் கோபத்தை தவிர்க்கவும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலகத்தில் புதிய பதவி கிட்டும்.

துலாம்: தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

விருச்சிகம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர். பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும். அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் கவனம் தேவை.

தனுசு: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர். பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தினரால் மனநிம்மதிகிட்டும். அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் கவனம் தேவை.

மகரம்: முன் கோபத்தை தவிர்த்து அறிவுப்பூர்வமாக செயல்படுவீர். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

கும்பம்: மனக் குழப்பங்கள் விலகும். விருந்தினர் வருகை உண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். வியாபாரத்தில் லாபமுண்டு. உத்தியோகத்தில் நிம்மதி பிறக்கும். சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.

மீனம்: பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பர். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்